YouTurn

முதல்வர் ஸ்டாலின் தாம்பரம் மேயரின் குழந்தைக்கு 'திராவிட மாடல்' எனப் பெயர் சூட்டியதாகப் பரவும் போலிச் செய்தி

முதல்வர் ஸ்டாலின் தாம்பரம் மேயரின் குழந்தைக்கு 'திராவிட மாடல்' எனப் பெயர் சூட்டியதாகப் பரவும் போலிச் செய்தி

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு 'திராவிட மாடல் “ என பெயர் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் அவர்களின் குழந்தைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் " திராவிட மாடல்" எனப் பெயர் சூட்டியதாக ஏபிபி நாடு சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.



Archive link 



உண்மை என்ன ? 

டிசம்பர் 27ம் தேதி தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற போது தாம்பரம் மாநகராட்சி வசந்தகுமாரி கமலக்கண்ணன் கைக் குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது அவரின் குழந்தைக்கு " திராவிட அரசன் " எனப் பெயர் சூட்டியதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.



வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடிய போது, டிசம்பர் 27ம் தேதி ஏபிபி நாடு வெளியிட்ட நியூஸ் கார்டில், " தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு திராவிட அரசன் என பெயர் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் " என்றே வெளியாகி இருக்கிறது.



Twitter link | Archive link 

ஏபிபி நாடு வெளியிட்ட நியூஸ் கார்டில், " திராவிட அரசன் " என இடம்பெற்ற இடத்தில் " திராவிட மாடல் " எனப் பெயரை மாற்றி எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க : முதல்வர் ஸ்டாலின் ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவிட்டாரா ?

மேலும் படிக்க : முதலமைச்சருக்கு 70 வயது அவரது ஆசிரியருக்கு 68 வயது எனப் பொய் பரப்பும் கிஷோர் கே சாமி !

இதற்கு முன்பாக, முதல்வர் ஸ்டாலின் ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவு பிறப்பித்ததாகவும், 70 வயதான முதல்வரின் ஆசிரியருக்கு 68 வயது தான் எனப் பொய்கள் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு 'திராவிட மாடல் “ எனப் பெயர் சூட்டியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது. முதல்வர் ஸ்டாலின் மேயரின் குழந்தைக்கு திராவிட அரசன் என்றே பெயர் சூட்டி உள்ளார் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க