YouTurn

தாஜ்மஹாலை தனியார் ஹோட்டலுக்கு ஒத்திக்கு விடுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதா ?

தாஜ்மஹாலை தனியார் ஹோட்டலுக்கு ஒத்திக்கு விடுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 99 ஆண்டுகளுக்கு தி பிளாசா என்ற நியூயார்க் ஹோட்டலுக்கு ஒத்திக்கு விடப்படும், சினிமா படப்பிடிப்பு, திருமணங்கள் நடத்தவும் அனுமதி



Twitter link

விரிவான விளக்கம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய அரசின் 2021-22ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இந்தியா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசத்திற்கு விற்பனை செய்வதாக இந்த பட்ஜெட் தாக்கல் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுகிறது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 99 ஆண்டுகளுக்கு தி பிளாசா என்ற நியூயார்க் ஹோட்டலுக்கு ஒத்திக்கு விடப்படும் என அறிவிப்பு வெளியாகியதாக புதியதலைமுறையின் செய்தி நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

மத்திய பட்ஜெட்டில் தாஜ்மஹாலை நியூயார்க் ஹோட்டலுக்கு ஒத்திக்கு விடுவதாக எந்த செய்தியும் ஊடங்களிலும் வெளியாகவில்லை. புதியதலைமுறை செய்தியின் முகநூல் பக்கத்தில் நியூஸ் கார்டுகளை ஆராய்கையில், அப்படி எந்தவொரு நியூஸ் கார்டும் இடம்பெறவில்லை.



Facebook link | Archive link  

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட ஒரு  நியூஸ் கார்டில் எடிட் செய்து தாஜ்மஹால் குறித்த தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 99 ஆண்டுகளுக்கு தி பிளாசா என்ற நியூயார்க் ஹோட்டலுக்கு ஒத்திக்கு விடப்படும், சினிமா படப்பிடிப்பு, திருமணங்கள் நடத்தவும் அனுமதி என பரப்பப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க