YouTurn

மாத்திரை வடிவில் டிஷ்சு பேப்பர்..!

மாத்திரை வடிவில் டிஷ்சு பேப்பர்..!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

முகத்தை துடைக்க உதவும் டிஷ்சு பேப்பர் என்ற துணியை மாத்திரை வடிவில் சிறிதாக்கி ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றனர். இதை மாத்திரையில் சாப்பிடும் போது அபாயம் இருப்பதாக அச்சத்தை உருவாக்கி வருகிறார்கள். வெள்ளை நிறத்தில் உருளை வடிவில் பார்ப்பதற்கு மாத்திரை போன்று டிஷ்சு பேப்பரை சிறிதாக்கி...

பரவிய செய்தி

மாத்திரை போல் உள்ள துணி. பெற்றோர்கள் கவனத்திற்கு குழந்தைகள் மாத்திரை சாப்பிடும் முன் அது மாத்திரையா இல்லையா என்று கவனிங்கள். மருத்துவர் பரிந்துரை செய்த பிறகு சாப்பிடவும் எச்சரிக்கை எதிலும் ?

விரிவான விளக்கம்

முகத்தை துடைக்க உதவும் டிஷ்சு பேப்பர் என்ற துணியை மாத்திரை வடிவில் சிறிதாக்கி ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றனர். இதை மாத்திரையில் சாப்பிடும் போது அபாயம் இருப்பதாக அச்சத்தை உருவாக்கி வருகிறார்கள்.



வெள்ளை நிறத்தில் உருளை வடிவில் பார்ப்பதற்கு மாத்திரை போன்று டிஷ்சு பேப்பரை சிறிதாக்கி வைத்துள்ளனர். 10 மாத்திரைகள் கொண்ட பாக்கெட் மற்றும் தனியாக மிட்டாய் போன்ற சிறிய பாக்கெட்களிலும் இவை வைக்கப்பட்டுள்ளன. இவ்வகை டிஷ்சு பேப்பர் 1 செ.மீ அளவிற்கு உருளை வடிவில் இருக்கும். டிஸ்சு பேப்பர் மட்டுமின்றி towel போன்று நீளமாகவும் கூட துணிகளை சிறிதாக்கி வைத்துள்ளனர்.



JERN என்ற நிறுவனத்தால் ஆன்லைன் மூலம் விற்கப்படும் இந்த வகை டிஷ்சு பேப்பர்கள் இந்தியாவிலும் விற்பனையில் உள்ளன. தரத்திற்கு ஏற்ப அதன் விலையும் அதிகம். 100 எண்ணிக்கை கொண்ட டிஷ்சு பேப்பர்கள் 10 முதல் 14 டாலர்கள் வரை விற்கப்படுகிறது. பல நிறுவனங்கள் இந்த டிஸ்சு பேப்பர் விற்பனையில் போட்டி போட்டுக் கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கி உள்ளன ".



சாதாரண மக்கள் இவற்றை பயன்படுத்தப் போவதில்லை என்றாலும் இதைப் பற்றி மக்களே வீடியோ பதிவு மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.



சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக யாராவது பயன்படுத்தி அதை மிட்டாய் என சிறு குழந்தைகள் சாப்பிட வாய்ப்புகள் உள்ளன. எனினும் அதனை  வைத்து மாத்திரைக்கு பதில் துணியை வைத்து விற்கிறார்கள் என்பது போல் தேவை இல்லாத பதற்றத்தை உண்டாக்குவது சரி அல்ல..!

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.