YouTurn

சுவிட்சர்லாந்தின் மேட்டர்ஹார்ன் மலையில் ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி !

சுவிட்சர்லாந்தின் மேட்டர்ஹார்ன் மலையில் ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சுவிட்சர்லாந்து இந்தியாவுடன் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து இந்தியர்களுக்கு " நம்பிக்கையையும் வலிமையையும் " வழங்குவதற்கு சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸில் உள்ள புகழ்பெற்ற மேட்டர்ஹார்ன் மலையில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை முப்பரிமாண வடிவில்...

பரவிய செய்தி

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்பதற்கு அடையாளமாக நம் தேசியக்கொடி  Switzerland-ல் Alps மலைத்தொடரில் உள்ள Matterhorn மலையில் முப்பரிமாண வடிவில் ஒளிரூட்டப்பட்டது.

விரிவான விளக்கம்

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சுவிட்சர்லாந்து இந்தியாவுடன் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து இந்தியர்களுக்கு " நம்பிக்கையையும் வலிமையையும் " வழங்குவதற்கு சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸில் உள்ள புகழ்பெற்ற மேட்டர்ஹார்ன் மலையில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை முப்பரிமாண வடிவில் ஒளிரூட்டி உள்ளனர்.






ஏப்ரல் 18-ம் தேதி Zermatt Matterhorn மலையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் மலையில் இந்திய மூவர்ணக் கொடி ஒளிரூட்டப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுவிஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான புகைப்படம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டு உள்ளது.



சுவிஸ் நாட்டின் லைட் ஆர்ட்டிஸ்ட் ஜெர்ரி ஹோஃப்ஸ்டெட்டர் சுவிட்சர்லாந்திற்கும், இத்தாலிக்கும் இடையில் 4,478 மீட்டர் மலைச் சிகரத்தில் பல்வேறு நாடுகளின் கொடிகள் மற்றும் நம்பிக்கைச் செய்தியை கொண்டு ஒளிரச் செய்து வருகிறார். அவை பார்ப்பதற்கு கண்கவர் காட்சியாக அமைந்து வருகிறது.







ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…