YouTurn

சுஷாந்த் சிங்கை கிரிக்கெட் வீரர் என ராகுல் காந்தி கூறினாரா ?

சுஷாந்த் சிங்கை கிரிக்கெட் வீரர் என ராகுல் காந்தி கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இறப்பிற்கு இந்திய அளவில் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு பதிவுகள் வெளியாகின. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடிகர் சுஷாந்த் சிங்கை ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளதாக மேற்காணும் போலியான ட்வீட் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரல்...

பரவிய செய்தி

" சுஷாந்த் சிங் ராஜ்புத் காலமானதை கேட்டு நான் வருந்துகிறேன். ஒரு இளம் மற்றும் திறமையான கிரிக்கெட் வீரர், மிக விரைவில் மறைத்துள்ளார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு எனது இரங்கல்.

விரிவான விளக்கம்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இறப்பிற்கு இந்திய அளவில் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு பதிவுகள் வெளியாகின. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடிகர் சுஷாந்த் சிங்கை ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளதாக மேற்காணும் போலியான ட்வீட் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகிறது.

ஜூன் 14-ம் தேதி ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான இரங்கல் பதிவில், " சுஷாந்த் சிங் ராஜ்புத் காலமானதை கேட்டு நான் வருந்துகிறேன். ஒரு இளம் மற்றும் திறமையான நடிகர், மிக விரைவில் மறைத்துள்ளார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு எனது இரங்கல் " என்றேக் கூறப்பட்டுள்ளது.



Twitter link | archive link 

ராகுல் காந்தி உடைய ட்வீட் பதிவை ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து " நடிகர் " எனக் குறிப்பிட்ட இடத்தில் " கிரிக்கெட் வீரர் " என எடிட் செய்தி போலியான ட்வீட் பதிவை அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் பகிர்ந்து உள்ளனர். அந்த போலி ஸ்க்ரீன்ஷார்ட் ட்வீட் பதிவு இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு உள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க