YouTurn

சூரத் தொழிலாளர் குடும்பம் பசியால் தூக்கிட்டு கொண்டதாக பரவும் தவறான புகைப்படம் !

சூரத் தொழிலாளர் குடும்பம் பசியால் தூக்கிட்டு கொண்டதாக பரவும் தவறான புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல மாநிலங்களில் கூலி வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்களுடைய மனைவி, குழந்தைகளுடன் நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. Facebook link | archive link அப்படி சூரத்தில் இருந்து நடந்து சென்ற...

பரவிய செய்தி

சூரத்திலிருந்து நடந்து சென்றபோது பசிக்கொடுமை தாங்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட மூன்று பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்தனர். இந்திய அரசாங்கமே இந்து மூன்று பேரை கொலை செய்து விட்டது.

விரிவான விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல மாநிலங்களில் கூலி வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்களுடைய மனைவி, குழந்தைகளுடன் நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது.



Facebook link | archive link

அப்படி சூரத்தில் இருந்து நடந்து சென்ற தொழிலாளர் குடும்பம் பசிக் கொடுமை தாங்க முடியாமல் குழந்தையுடன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மேற்காணும் புகைப்படம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.



Twitter link | archive link 

உண்மை என்ன ? 

சூரத் நகரில் இருந்து குடும்பத்தினர் நடந்து சென்ற பொழுது  பசியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா எனத் தேடுகையில் அது தொடர்பான செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை. மாறாக, சூரத்தில் 62 வயது முதியவர் வாகனம் கிடைக்காமல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு நடந்து செல்லும் பொழுது இறந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியான செய்தியே கிடைத்தது.



இதையடுத்து, பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் அப்புகைப்படம் 2019 மார்ச் மாதத்திலேயே யூடியூப் வீடியோக்கள் சிலவற்றில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிய நேர்ந்தது.



Youtube link | archive link

எனினும், அதைத் தவிர்த்து மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர்கள் யார், எதனால் இறந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் நமக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், அப்புகைப்படம் ஓராண்டிற்கு முன்பே பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதை அடிப்படையாக வைத்து பரவி வரும் தகவல் தவறானது என கூற முடிகிறது.

இந்தியாவில் ஊரடங்கு நிலை அமலுக்கு வந்த பிறகு பல மாநிலங்களில் இருந்து வாகன வசதி இல்லாமல் நடந்து சென்ற மக்களில் குறைந்தது 22 பேர் இறந்து இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க : ம.பியில் பட்டினியால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட புகைப்படமா ?

முந்தைய கட்டுரையில், ஊரடங்கு தொடர்வதால் பட்டினியால் மத்திய பிரதேசத்தில் ஓர் குடும்பமே தற்கொலை செய்து கொண்டதாக தவறான புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது என்பதை விளக்கி இருந்தோம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…