YouTurn

தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்ததாக பரவும் 2022ஆம் ஆண்டின் பழைய செய்தி!

தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்ததாக பரவும் 2022ஆம் ஆண்டின் பழைய செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக நியூஸ் தமிழ் 24 ×7 செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் 1:26 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை அதிமுகவை சேர்ந்தவர்கள் பரப்பி வருகின்றனர்.பரவக்கூடிய வீடியோ குறித்து தேடியதில் இது தற்போது நடந்தது அல்ல என்பதை அறியமுடிந்தது.மேலும், நியூஸ் தமிழ் 24 ×7 செய்தி குறித்து அவர்களது அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் தேடினோம். அப்படி எந்தவொரு செய்தியும் தற்போது வெளியாகவில்லை என்பதையும் அறியமுடிந்தது.

பரவிய செய்தி

தமிழக அரசுக்கு 5 லட்சம் அபராதம் உச்சநீதிமன்றம் நெம்பர் ஒன் முதல்வருக்கு வந்த சோதனை.   


X Link


விரிவான விளக்கம்

தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக  நியூஸ் தமிழ் 24 ×7 

செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் 1:26 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை அதிமுகவை சேர்ந்தவர்கள் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ?


பரவக்கூடிய வீடியோ குறித்து தேடியதில் இது தற்போது நடந்தது அல்ல என்பதை அறியமுடிந்தது.

மேலும், நியூஸ் தமிழ் 24 ×7 செய்தி குறித்து அவர்களது அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் தேடினோம். அப்படி எந்தவொரு செய்தியும் தற்போது வெளியாகவில்லை என்பதையும்  அறியமுடிந்தது.  

இதனைத்தொடர்ந்து , பரவக்கூடிய வீடியோவில் உள்ள தலைப்பைக் கொண்டு தேடியதில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி  அன்று நியூஸ் தமிழ் 24 ×7 அவர்களது முகநூல் பக்கத்தில் பரவக்கூடிய முழு வீடியோ பதிவிட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

மேலும் தேடியதில், “நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் – உச்சநீதிமன்றம்!” என்ற தலைப்பில் புதிய தலைமுறை அவர்களது இணையதளப் பக்கத்தில் கடந்த 28 செப்டம்பர் 2022 அன்று கட்டுரை ஒன்று வெளியிட்டு இருப்பதையும் காணமுடிந்தது . 

இதே போன்று, தமிழக அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்… காரணம் இதுதான்! என்ற தலைப்பில்  கடந்த ஆண்டு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி விகடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 

இதன்மூலம் பரவக்கூடிய நியூஸ் தமிழ் செய்தி தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பது உறுதியாகிறது.

முடிவு :

நம் தேடலில்,  பரவக்கூடிய செய்தி தற்போது நடந்தது அல்ல என்பதையும் 2022ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு என்பதையும் அறியமுடிகிறது.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க