YouTurn

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த தமிழக அரசு அனுமதி கோரியதா?

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த தமிழக அரசு அனுமதி கோரியதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளதாக தந்தி தொலைக்காட்சி செய்தி ஒன்று இன்று வெளியிட்டது.

விரிவான விளக்கம்

மாநிலத்தில் முன்பு நடைமுறையில் இருந்த 12ஆம் வகுப்பு தேர்வின் தேர்ச்சி அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கையை தொடரவும், மத்திய அரசின் கீழ் உள்ள இடங்களில் மட்டும் நீட் நடத்திகொள்ளவும் கோரிக்கை வைத்து உள்ளதை தவறுதலாக மாநில அளவில் தேர்வு நடத்த தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளதாக தந்தி தொலைக்காட்சி செய்தி செய்தியை வெளியிட்டு விட்டது.

சுருக்கமாக

+2 தேர்வுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடத்தப்பட்டது. தமிழகம் சார்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்களும் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களும் மற்றும் சில முக்கிய ஆலோசகர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற்றனர்.கூட்டத்திற்கு பிறகு நீட் தேர்வு குறித்து தமிழக அமைச்சர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது

இந்நிலையில், “மத்திய அரசின் மருத்துவ சேர்க்கைக்கான ஒதுக்கீட்டில் நீட் தேர்வு நடத்திக்கொள்ளலாம், மாநில சேர்க்கைக்கான ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு என தனி தேர்வு நடத்த உள்ளதாக பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகின.



ஆனால் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் அளித்துள்ள பேட்டியில் , “நீட் தேர்வை நடத்தக் கூடாது. மத்திய அரசின் கட்டுப்பாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் வேண்டுமென்றால் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடத்திக்கொள்ளுங்கள்.” என வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.



மேலே இணைக்கப்பட்டு உள்ள காணொளியில் 4.16 ஆம் நிமிடத்தில் அமைச்சர் "அந்த அந்த மாநிலத்தில் முதலில் நடந்த தேர்வையே தொடர கோரிக்கை வைத்துள்ளோம்" என்று கூறுவார்.

பின்னர் செய்தியாளர் ஒருவர் "அப்பொழுது முதலில் நடந்த 12ஆம் வகுப்பு தேர்வையே தொடர்வதா?" என்று வினா எழுப்பிய போது "ஆம் நீட் தேர்வே வேண்டாம்... மாநிலத்தில் முதலில் நடந்த தேர்வையே தொடரவும், மத்திய அரசின் கீழ் உள்ள இடங்களில் மட்டும் நீட் நடத்திகொள்ளவும் கோரிக்கை வைத்து உள்ளோம்" என் கூறி உள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க