YouTurn

ஸ்டாலின் பெரிய டென்னிஸ் பேட்டில் டேபிள் டென்னிஸ் விளையாடினாரா ?

ஸ்டாலின் பெரிய டென்னிஸ் பேட்டில் டேபிள் டென்னிஸ் விளையாடினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திமுக தலைவர் ஸ்டாலின் பெரிய டென்னிஸ் பேட்டை வைத்துக் கொண்டு டேபிள் டென்னிஸ் விளையாடுவதாக புகைப்படமொன்று ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிண்டலாக பகிரப்பட்டு வருகிறது. அண்ணே இது நீங்களா?! @mkstalin https://t.co/KHnaWEigiO — KalyaanBJP (@BjpKalyaan) May 2, 2020 Twitter link | archive...

பரவிய செய்தி

டென்னிஸ் பேட்டில் டேபிள் டென்னிஸ் விளையாடும் எங்கள் தலைவர் சர்வதிகாரி.



Twitter link | archive link 

விரிவான விளக்கம்

திமுக தலைவர் ஸ்டாலின் பெரிய டென்னிஸ் பேட்டை வைத்துக் கொண்டு டேபிள் டென்னிஸ் விளையாடுவதாக புகைப்படமொன்று ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிண்டலாக பகிரப்பட்டு வருகிறது.



Twitter link | archive link 



Facebook link | archive link

மணிகண்ட பிரபு நாயுடு என்பவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட  புகைப்படத்தை கல்யாணராமன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினை டக் செய்து பகிர்ந்து உள்ளார். கடந்த ஆண்டில் இருந்து கிண்டலாக வைரல் செய்யப்பட்டு வரும் ஸ்டாலின் டேபிள் டென்னிஸ் விளையாடும் புகைப்படத்தின் குவாலிட்டி மிகக் குறைவாக இருப்பதால், புகைப்படம் உண்மையா என தேடிப் பார்த்தோம்.

உண்மை என்ன ? 

ஸ்டாலின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 மே 10-ம் தேதி திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் முகநூல் பக்கத்தில் " Picture of the day " என ஸ்டாலின் டேபிள் டென்னிஸ் விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.



Facebook link | archive link

2019-ல் ரங்கராஜ் பாண்டே அவர்களின் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தில் டேபிள் டென்னிஸ் விளையாடப் பயன்படுத்தப்படும் சிறிய பேட்டை வைத்தே விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் ஸ்டாலின் கையில் பெரிய டென்னிஸ் பேட்டை வைத்து எடிட் செய்து உள்ளனர்.



திரு.கல்யாணராமன் உடைய ட்விட்டர் பக்கத்தில் kalyaanbjp எனக் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், அவர் தமிழக பாஜகவில் எந்தவொரு பொறுப்பிலும் இல்லை என தமிழக பாஜக சார்பில் அறிக்கை வெளியாகி இருக்கிறது.



Facebook link | archive link

மே 2-ம் தேதி கல்யாணராமன் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் உடைய டென்னிஸ் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதையடுத்து, தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.எஸ் நரேந்திரன் கல்யாணராமன் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…