YouTurn

மு.க ஸ்டாலின் உடைய பேரன் என வைரலாகும் புகைப்படம் !

மு.க ஸ்டாலின் உடைய பேரன் என வைரலாகும் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நியூ இந்தியா எனும் முகநூல் குரூப்-ல் உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து இருக்கும் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உடைய பேரன் என பகிர்ந்து உள்ளனர். நியூ இந்தியாவ முகநூல் குரூப்-ல் பதிவிடப்பட்ட இப்பதிவு அதிகம் ஷேர் செய்யப்பட்டு தற்பொழுது முகநூல் குரூப்களில்...

பரவிய செய்தி

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உடைய பேரன், சபரீசன் மகன்.



 

விரிவான விளக்கம்

நியூ இந்தியா எனும் முகநூல் குரூப்-ல் உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து இருக்கும் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உடைய பேரன் என பகிர்ந்து உள்ளனர். நியூ இந்தியாவ முகநூல் குரூப்-ல் பதிவிடப்பட்ட இப்பதிவு அதிகம் ஷேர் செய்யப்பட்டு தற்பொழுது முகநூல் குரூப்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.





Facebook link | Archived link

படத்தில் இருப்பவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மகன் என நியூ இந்தியா முகநூல் குரூப்பிலும், சில பதிவுகளில் உதயநிதி ஸ்டாலின் உடைய மகன் இன்பநிதி என்றும் பகிர்ந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.

கிலோ கணக்கில் தங்க நகைகளை உடல் முழுவதும் அணிந்து இருக்கும் நபரின் புகைப்படத்தை கொண்டு இணையத்தில் தேடுகையில், அந்நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை காண முடிந்தது.




புகைப்படத்தில் தங்க நகை அணிந்து இருக்கும் நபர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தன் பந்தர்கார் ஆவார். புனேவில் வாசிக்க கூடிய ஹர்ஷ்வர்ஷன் பந்தர்கார் " Young Golden boy " என அழைக்கப்படுகிறார். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 52,000-ஐ தாண்டி உள்ளது.




தமிழகத்தில் ஸ்டாலின் உடைய பேரன் என வைரலாகும் புகைப்படத்தைப் போன்று ஹர்ஷ்வர்ஷன் பந்தர்கார் தங்க நகைகளை அணிந்து பவுன்சர்கள் உடன் இருக்கும் புகைப்படங்கள், திருமண விழாவில் , கட்சி போஸ்டர்களில் என பல்வேறு புகைப்படங்கள் பதிவிட்டு இருக்கிறார்.



ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடைய மகன் குறித்த புகைப்படங்கள் எங்கும் கிடைக்கவில்லை. ஸ்டாலின் பேரன் மற்றும் உதயநிதி உடைய மகனான இன்பநிதி உடைய புகைப்படத்தை மேலே காணலாம். புரளிகளில் அரசியல் உள்நோக்கமும் இருப்பதால் முகநூலில் ஓர் செய்தியை பகிர்வதற்கு முன்பாக அதன் நம்பகத்தன்மை குறித்து அறிந்து பிறகு பகிரவும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…