YouTurn

வீட்டிற்குள் தண்ணீர் வராமல் இருக்க கேட்டை மூடுங்கள் என ஸ்டாலின் கூறியதாகப் போலி செய்தி !

வீட்டிற்குள் தண்ணீர் வராமல் இருக்க கேட்டை மூடுங்கள் என ஸ்டாலின் கூறியதாகப் போலி செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள்



Archive link 

விரிவான விளக்கம்

சென்னையில் பெய்த கன மழையால் நகரத்தின் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன. தற்போதும் தண்ணீர் வடியாத பகுதிகள் பல உள்ளன. சென்னையின் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதற்கிடையில், வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியாக சன் நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?  

சன் நியூஸ் கார்டை உன்னிப்பாக பார்த்தால், அதில் இடம்பெற்றுள்ள செய்தி எடிட் செய்யப்பட்டுள்ளது எனத் தெளிவாய் தெரிகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினை ட்ரோல் செய்யும் வகையில் யாரோ தவறாக எடிட் செய்த நியூஸ் கார்டை பரப்பி இருக்கிறார்கள். ஆனால், அதை உண்மையாக கூறியது போன்று கமெண்ட்களுடன் பரப்பப்பட்டு வருகிறது.



Facebook link 

நவம்பர் 7-ம் தேதி சன் நியூஸ் கார்டில், " மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளேன் என மழைப் பாதிப்புகளை ஆய்வு செய்தபின் முதலமைச்சர் பேட்டி " என வெளியாகி இருக்கிறது.



முடிவு :

நம் தேடலில், சன் நியூஸ் சேனலில் வெளியான நியூஸ் கார்டில், வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியதாக போலியான செய்தியை எடிட் செய்து இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க