யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தவிக்க விட்டுவிட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே தப்பியோட்டம் !! அசாதாரண சூழ்நிலையில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு ஒரே தீர்வு,தலைமன்னாரை தாண்டி இருக்கும் தமிழகத்தை ஆட்சி செய்யும் தலைவர் ஸ்டாலினின் அதிகாரத்தின் கீழ் இலங்கையை கொண்டுவர வருவதே !!
Facebook link
Facebook linkவிரிவான விளக்கம்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எழுந்த எதிர்ப்பால் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இலங்கையின் அசாதாரண சூழலை சமாளிக்க மு.க.ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் இலங்கையை கொண்டு வர வேண்டும் என ஊடகவியலாளர் செந்தில் வேல் கூறியதாக ட்வீட் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவும் ட்வீட் குறித்து தேடுகையில், ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் இயங்கும் @senthillvel79 எனும் போலியான ட்விட்டர் பக்கத்தில் மே 10-ம் தேதி, " கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தவிக்க விட்டுவிட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே தப்பியோட்டம் !! அசாதாரண சூழ்நிலையில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு ஒரே தீர்வு,தலைமன்னாரை தாண்டி இருக்கும் தமிழகத்தை ஆட்சி செய்யும் தலைவர் ஸ்டாலினின் அதிகாரத்தின் கீழ் இலங்கையை கொண்டுவர வருவதே !! " என ட்வீட் வெளியாகி இருக்கிறது.

Archive link
இதே போலியான ட்விட்டர் பக்கத்தில் வெளியான தவறான பதிவுகள் சிலவும் ஊடகவியலாளர் செந்தில்வேல் பெயரில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. மேலும், தமிழ் கேள்வி மற்றும் செந்தில்வேல் கூறியதாக வேறு சில பொய் செய்திகளை நாம் பதிவிட்டு உள்ளோம்.
மேலும் படிக்க : வில் ஸ்மித் ஆஸ்கர் விருது பெற்றதை செந்தில்வேல் விமர்சித்ததாக பரவும் போலி ட்வீட் !
மேலும் படிக்க : எரிபொருள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என அண்ணாமலை கூறியதாகப் போலிச் செய்தி !
மேலும் படிக்க : ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் பரவும் போலிச் செய்தி, போலி ட்வீட் !
முடிவு :
நம் தேடலில், அசாதாரண சூழ்நிலையில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு ஒரே தீர்வு, தலைமன்னாரை தாண்டி இருக்கும் தமிழகத்தை ஆட்சி செய்யும் தலைவர் ஸ்டாலினின் அதிகாரத்தின் கீழ் இலங்கையை கொண்டுவர வருவதே என ஊடகவியலாளர் செந்தில் வேல் பதிவிட்டதாக பரவும் ட்வீட் போலியானது என அறிய முடிகிறது.