யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பர்தா உடை அணிந்த பெண்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது அவர்கள் மீது ஆண்கள் சிலர் சேற்று நீரை அள்ளி வீசும் வீடியோ வைரல் ஆனவை. இவ்வாறு பகிரப்பட்ட வீடியோ உடன் இருக்கும் வாசகத்தில் முஸ்லீம் மாணவிகள் மீது ஹிந்து மாணவர்கள் என்றும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் நடத்தும் கொடுமை என எழுதப்பட்டு உள்ளது...
பரவிய செய்தி
முஸ்லீம் மாணவிகள் மீது ஹிந்து ஆதரவாளர்கள் சேற்றை அள்ளி வீசும் கொடூரம்.

விரிவான விளக்கம்
பர்தா உடை அணிந்த பெண்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது அவர்கள் மீது ஆண்கள் சிலர் சேற்று நீரை அள்ளி வீசும் வீடியோ வைரல் ஆனவை. இவ்வாறு பகிரப்பட்ட வீடியோ உடன் இருக்கும் வாசகத்தில் முஸ்லீம் மாணவிகள் மீது ஹிந்து மாணவர்கள் என்றும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் நடத்தும் கொடுமை என எழுதப்பட்டு உள்ளது.
ஆயிரக்கணக்கான ஷேர்கள், லைக் என வட இந்தியா முழுவதும் பரவிய இந்த வீடியோ பதிவால் ஹிந்து, முஸ்லிம் மதம் சார்ந்த கடுமையான வார்த்தைகள் கொண்டு பேசப்பட்டு வந்தது.
ஆனால், அந்த வீடியோவில் இருக்கும் மாணவர்கள் தமிழில் பேசி இருப்பார்கள். இது பற்றி விரிவாக தேடிப்பார்க்கையில் ஃபேஸ்புக் பதிவில்23 பிப்ரவரி 2019-ல் Mohamed Sarjoon இதே வீடியோவை இணைத்து முஸ்லிம் பெண்கள் மீது மட்டும் நடக்கும் அநீதி என பதிவிட்டு இருந்தார்.
இந்த ஃபேஸ்புக் பதவில் இருந்து முஸ்லீம் பெண்கள் மீது சேற்றை அள்ளி வீசும் வீடியோ காட்சிகள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல, இலங்கை என்பது உறுதியானது.
அடுத்து, இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் முஸ்லீம் மாணவிகள் மீது மட்டும் பகடிவதை(ராக்கிங்) செய்வதாக மேலும் பல பதிவுகள் பரவின.ஏனெனில், பரவிய வீடியோவில் இருந்த மாணவர்கள் தமிழில் பேசி இருப்பர் மற்றும் முஸ்லீம் பெண்கள் மட்டுமே இருந்து இருப்பர்.

ஆனால், உண்மையில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரின் மீதும் சீனியர்கள் எனக் கூறிக் கொண்டு ராக்கிங் செய்யும் பழக்கம் அங்கு அதிகமாகவே இருந்து வருகிறது.
முஸ்லீம் மாணவிகளுக்கு முன்பு பிற மாணவிகள் மற்றும் மாணவர்கள் மீதும் சேற்று நீரை அள்ளி வீசும் காட்சிகள் பதிவிடப்பட்டுள்ளன. அங்கு வேறுபாடு என்பது மேல் வகுப்பு மாணவர்கள்(சீனியர்), கீழ் வகுப்பு மாணவர்கள்(ஜூனியர்) ஆகும். கீழ் வகுப்பில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள் அனைவரின் மீதும் ராக்கிங் கொடூரமாக இருக்கிறது. இப்படி நடந்து கொள்ளும் மாணவர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவர், ஆனால் மீண்டும் இது போன்ற ராக்கிங்களே அரங்கேறுகிறது.
இலங்கையில் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ராக்கிங் பற்றியும், அதனால் இறந்த மாணவ, மாணவிகளின் விவரங்கள் மற்றும் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சென்றவர்களின் எண்ணிக்கை என அதைப் பற்றிய முழு விவரத்தையும் இலங்கையில் உள்ள madawala என்ற தமிழ் செய்தி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இலங்கை பல்கலைக்கழகங்களில் நடக்கும் ராக்கிங் ஆல் பல மாணவ, மாணவிகள் இறந்துள்ளனர். சீனியர்கள் என்ற வெறியில் இவ்வாறு கொடூரமாக நடந்துக் கொள்வது அநீதியாகும்.
கிடைத்த ஆதாரங்களின் படி, மாணவிகள் மீது சேற்றை வீசி கொடூரமாக நடந்தும் கொள்ளும் வீடியோ இந்தியாவில் நடக்கவில்லை என்பதும், முஸ்லீம் மாணவிகளுக்கு மட்டும் நடக்கவில்லை என்று தெளிவாக புரிந்து இருக்கும்.

சுருக்கமாக
இலங்கை பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த சம்பவத்தை இந்தியாவில் நிகழ்ந்ததாக வதந்திகள் பரவி வருகின்றன.