YouTurn

பாடகர் எஸ்.பி.பி கொரோனாவில் குணமாகியதாக வதந்தி !

பாடகர் எஸ்.பி.பி கொரோனாவில் குணமாகியதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த SPB என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட பிரபல பாடகர் பாலசுப்பிரமணி முழுமையாக குணம் அடைந்தார்..

Facebook link | archive link 

விரிவான விளக்கம்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் கொரோனா வைரஸில் இருந்து குணமாகியதாகவும், கொரோனா நெகட்டிவ் என வந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஊடகங்களில் வெளியான செய்தியால் எஸ்.பி.பி குணமடைந்து விட்டதாக சமூக வலைதளங்களிலும் பரவத் தொடங்கின.





இந்நிலையில், எஸ்.பி.பிக்கு கொரோனா வைரஸ் நெகட்டிவ் என வெளியான செய்திகள் குறித்து அவரின் மகன் எஸ்.பி.சரண் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.



Facebook link | archive link 

" எப்போதும் மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே தந்தையின் உடல்நலம் குறித்த வீடியோவை வெளியிடுவேன். ஆனால், இன்று அவருக்கு கோவிட்-19 நெகட்டிவ் வந்துவிட்டதாகக் கூறி தகவல்கள் பரவின. நெகட்டிவ் அல்லது பாசிட்டிவ் என்பது விஷயமல்ல. அவர் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார். எனவே, தவறான செய்திகளை பதிவிடுபவர்கள் கவனமாக இருங்கள். அவரின் உடல்நலம் குறித்த தகவல்கள் எனக்கே முதலில் வரும் " எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், எஸ்.பி.பிக்கு கோவிட்-19 நெகட்டிவ் என வந்தது உண்மையா அல்லது பொய்யா என விளக்கம் அளிக்கவில்லை. எஸ்.பி.பி முழுமையாக குணமடைந்தார் என்கிற தகவல் தவறானது எனத் தெரிவித்து இருக்கிறார். தற்போதும் எஸ்.பி.பி வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார். இதற்கு முன்பும், எஸ்.பி.பி கொரோனா பாதிப்பால் இறந்து விட்டதாக வதந்தியை பரவியது குறிப்பிடத்தக்கது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க