YouTurn

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் தங்கத்தில் கழிப்பறை என வதந்தி !

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் தங்கத்தில் கழிப்பறை என வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

என்னது வேலுமணி வீட்டில தங்கத்துல கழிப்பறை யா? என்னங்கடா சொல்றீங்க?



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் தங்கத்தில் செய்யப்பட்ட கழிப்பறை இருந்ததாக சில புகைப்படங்கள் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2016 செப்டம்பரில் newyorker எனும் இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த தங்க கழிப்பறை நியூயார்க்கின் குகன்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.



லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் சோதனை நடத்திய பிறகு கட்டுக்கட்டாக பணம் கிடைத்ததாகக் கூறி பழைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரல் செய்தனர் என நாம் முன்பே கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : எஸ்.பி வேலுமணி வீட்டில் சிக்கிய பணம் எனப் பரவும் பழைய புகைப்படங்களின் தொகுப்பு !

அதேபோல், தற்போது வேலுமணி வீட்டில் தங்க கழிப்பறை இருப்பதாக இணையத்தில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் தங்கத்திலான கழிப்பறை என பரப்பப்படும் தகவல் வதந்தியே. அந்த புகைப்படம் அமெரிக்காவைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க