YouTurn

கேரளாவிற்கு தண்ணீர் வழங்கிய தமிழகம்..!

கேரளாவிற்கு தண்ணீர் வழங்கிய தமிழகம்..!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

கனமழையால் கேரளாவின் பல மாவட்டங்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், உடை என அடிப்படை தேவைகளை பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் அளித்து வருகின்றனர். கனமழை பொழிந்தாலும் குடிப்பதற்கான...

பரவிய செய்தி

வெள்ளம் பாதிப்பால் முகாம்களில் உள்ள மக்களின் தேவைக்காக தமிழகத்தில் இருந்து 2.8 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. வறட்சியில் தண்ணீர் கேட்டோம், ஆனால் இப்பொழுது அண்டை மாநிலம் தண்ணீரால் பாதிக்கப்படும் போது உதவுகிறது தமிழகம்.

விரிவான விளக்கம்

கனமழையால் கேரளாவின் பல மாவட்டங்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், உடை என அடிப்படை தேவைகளை பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் அளித்து வருகின்றனர்.

கனமழை பொழிந்தாலும் குடிப்பதற்கான சுகாதாரமான நீர் அவசியம். கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் எண்ணத்தில் தென்னக ரயில்வே திறந்தவெளி பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயிலில் தண்ணீர் டங்குகள் மூலம் முடிந்தளவு தண்ணீரை அனுப்பியுள்ளனர்.



சிறப்பு ரயிலில் 7 திறந்தவெளி வேகன்களில் 10,000 லிட்டர்கள் கொண்ட தண்ணீர் டங்குகள் வைக்கப்பட்டுள்ளன. 7 வேகன்களில் சுமார் 2.8 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு ஈரோட்டில் இருந்து திருவனந்தபுரம் செல்கிறது. பாலக்காடு வழித்தடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக மாற்றுப்பாதையில் ஆகஸ்ட் 17-ம் தேதி புறப்பட்டது.

“ கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் தண்ணீர் பிரச்சனை நிலவி வருவதால் கேரளா அரசு கேட்டுக்கொண்டதன் பெயரில் தென்னக ரயில்வே தண்ணீர் டங்குகள் நிரம்பிய ரயிலை அனுப்பி வைத்துள்ளது. ரயில் திருவனந்தபுரம் சென்ற பிறகு தண்ணீரை எவ்வாறு கொண்டு செல்வது என்பதை கேரளா அரசு முடிவு செய்யும். அடுத்த ரயில் நிலையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினாலும், அதை செய்ய நாங்கள் தயார் “ எனதென்னக ரயில்வேயின் உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார்.



7 வேகன்ஸ் மட்டுமல்லாமல் கூடுதலாக தண்ணீர் டங்குகள் நிரம்பிய 15 வேகன்ஸ்களை தண்டையார் பேட்டையில் பொருத்தப்பட்டு ஈரோட்டில் தண்ணீர் நிரப்பி மீண்டும் திருவனந்தபுரம் செல்லும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தண்ணீர் பாட்டில்கள் கொண்ட 15,000 பாக்ஸ்கள் தமிழ்நாட்டின் பழூர் பிளான்ட்டில் இருந்து பெறப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கேரளாவிற்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக

தென்னக ரயில்வே கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தண்ணீர் டங்குகள் நிரம்பிய 3 சிறப்பு ரயில்களை அனுப்பி வைத்துள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.