YouTurn

தென்னாப்பிரிக்காவில் 6000 ஆண்டு பழமையான சிவலிங்கமெனப் பரவும் பொய்!

தென்னாப்பிரிக்காவில் 6000 ஆண்டு பழமையான சிவலிங்கமெனப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தென்னாப்பிரிக்காவில் உள்ள ‘Sudwala’ குகையில் அப்படி எந்த சிலையும் இல்லை.

பரவிய செய்தி

எவ்வளவுதான் இந்து மத அடையாளங்களை உலகம் முழுக்க அழித்து ஒழிக்க நினைத்தாலும் அதன் ஆதாரங்கள் தினம் தோறும் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது..

 X link

விரிவான விளக்கம்

ஒவ்வொருவரும் அவர்கள் பின்பற்றும் மதம் மிகவும் பழமையானது என்றும் அறிவியல் பூர்வமானது என்றும் நிறுவ முயன்று கொண்டே உள்ளனர். அந்த வகையில் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிவ லிங்கத்தைத் தென்னாப்பிரிக்காவில் உள்ள Sudwara என்ற குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


https://x.com/i/web/status/1859056502926958900


உண்மை என்ன?


வீடியோவில் ‘தென்னாப்பிரிக்கா - Sudwara’ எனக் குறிப்பிட்டுள்ளதால் அவற்றைக் கொண்டு தேடினோம். அப்படி ஒரு குகை தென்னாப்பிரிக்காவில் இல்லை. ‘Sudwala’ குகைதான் உள்ளது. 


image.png


தென்னாப்பிரிக்காவில் Mpumalanga என்ற பகுதியில் உள்ள Sudwala குகையைச் சுற்றியுள்ள பாறைகள் தோராயமாக 3,000 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று ‘Trip Savvy’ என்ற தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த குகை சுமார் 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகத் தொடங்கி இருக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


சுற்றுலாத்தலமான இப்பகுதி பற்றி எழுதப்பட்ட எந்த தளத்திலும் அங்கு ஒரு சிவ லிங்கம் இருப்பதாக எந்த குறிப்புகளும் இல்லை. மேற்கொண்டு அந்த சுற்றுவட்டாரப் பகுதியில் ஏதேனும் சிவ லிங்கம் உள்ளதா என்று தேடினோம். 


குகை அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் ஒரு பாறையை இயற்கையில் உருவான லிங்கமெனச் சிலர் வழிபடுவது தொடர்பான வீடியோவில் காண முடிந்தது. அது சிவ லிங்க வடிவத்தில் இல்லை. 


image.png


பரவக் கூடிய வீடியோவில் முதலில் காண்பிக்கக் கூடிய சிவ லிங்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது. இரண்டாவதாகக் காட்டப்படுகிற லிங்கமும் இந்தியாவில் எடுக்கப்பட்டது எனப் புகைப்பட விற்பனைத்தளமான ‘big stock photo’ என்ற தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

மேற்கண்ட தகவல்களிலிருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள குகையில் 6000 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் வீடியோ தவறானது என்பதை அறிய முடிகிறது. இல்லாத சிலையை 6000 ஆண்டுகள் பழமையானது எனப் பொய் செய்தி பரப்புகின்றனர். 


முடிவு:


தென்னாப்பிரிக்காவில் 6000 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டறியப்பட்டுள்ளதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க