YouTurn

சோனியா காந்திக்கு பின்னால் "இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது எப்படி" என்ற புத்தகம் இருந்ததா ?

சோனியா காந்திக்கு பின்னால் "இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது எப்படி" என்ற புத்தகம் இருந்ததா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

“Zoom and look. There is a book “How to convert India into Christian nation. இப்படி எல்லாம் யோசிச்சா, பிறகு எப்படி இங்க முன்னுக்கு வர முடியும்??? இதனாலதான் பப்புவும் அப்படியே இருக்கான்.

Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பேசுவது போல் அமைந்து இருக்கும் புகைப்படத்தில், அவருக்கு பின்னால் " How to convert India into Christian nation " எனும் இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது தொடர்பான புத்தகம், பைபிள் மற்றும் இயேசு சிலை இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.





இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் சோனியா காந்தி புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2020 நவம்பரில் வெளியான NDTV, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகளில் சோனியா காந்தியின் இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.



ஆனால், அந்த புகைப்படத்தில் " How to convert India into Christian nation" மற்றும் பைபிள் புத்தகம் உள்ளிட்டவை இடம்பெறவில்லை என்பதை காணலாம்.



அதே உடை மற்றும் பின்னணியில் பீகார் மாநில மக்களுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசிய வீடியோ காங்கிரஸ் கட்சியின் யூடியூப் சேனலில் 2020 அக்டோபர் 27-ம் தேதி வெளியாகி இருக்கிறது.



முடிவு : 

நம் தேடலில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பேசும் புகைப்படத்தில் அவருக்கு பின்னால் " How to convert India into Christian nation ", பைபிள் மற்றும் இயேசு சிலை இருப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான படம் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க