YouTurn

இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள் | எப்பொழுது நிகழ்ந்தது ?

இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள் | எப்பொழுது நிகழ்ந்தது ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

அமெரிக்க ராணுவ வீரர்கள் இசைக்குழு இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் வீடியோ முகநூலில் பகிரப்பட்டு வருகிறது. அதே வீடியோவை யுடர்ன் ஃபாலோயர் ஒருவர் பகிர்ந்து, அதன் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் வீடியோ குறித்து...

பரவிய செய்தி

இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள்.

விரிவான விளக்கம்

மெரிக்க ராணுவ வீரர்கள் இசைக்குழு இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் வீடியோ முகநூலில் பகிரப்பட்டு வருகிறது. அதே வீடியோவை யுடர்ன் ஃபாலோயர் ஒருவர் பகிர்ந்து, அதன் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறு கேட்டுக் கொண்டார்.



இதையடுத்து, அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் வீடியோ குறித்து தேடிய பொழுது எகனாமிக் டைம்ஸ், NDTV, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்டவையில் வெளியாகிய செய்திகளை காண முடிந்தது.



இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்திய " Yudh Abhyas " 2019 எனும் ராணுவ கூட்டுப்பயிற்சி வாஷிங்க்டன் டி.சி-யின் Lewis McChord பகுதியில் செப்டம்பர் 5-ம் தேதி துவங்கியது. இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ கூட்டுப்பயிற்சி நிறைவடைந்த நாளில் அமெரிக்க ராணுவ வீரர்களின் இசைக்குழு " ஜன கன மன " பாடலை வாசித்து உள்ளனர்.

Yudh Abhyas ஆனது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான மிகப்பெரிய ராணுவ கூட்டுப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு சார்ந்த முயற்சிகளாகும். சமீபத்தில் நிகழ்ந்த கூட்டுப் பயிற்சி இரு நாடுகளுக்கு இடையேயான 15-வது பதிப்பாகும்.



அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் வீடியோவை ANI என்ற செய்தி நிறுவனம் ட்விட்டரில் செப்டம்பர் 18-ம் தேதி வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.