YouTurn

குரங்குக்கடி வாங்கியவர் குரங்குபோல் நடந்து கொண்டதாகப் பரவும் தவறான தகவல்!

குரங்குக்கடி வாங்கியவர் குரங்குபோல் நடந்து கொண்டதாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மனநலம் பாதிக்கப்பட்டவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அவர் குரங்குபோல் நடந்து கொண்டுள்ளார்.

பரவிய செய்தி

சிவகங்கை மாவட்டத்தில் குரங்கு கடித்து சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென குரங்கு போன்று தாவிய நிகழ்வு!!!?? அது எப்படி???


X link

விரிவான விளக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் குரங்கு கடித்து சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் என்று குரங்குபோல் நடந்துகொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

பரவக்கூடிய வீடியோ தொடர்பாக ’அரசியல் டுடே’ என்ற இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருந்ததைக் காணமுடிந்தது. 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச்சென்ற நிலையில் அங்கு மனநல மருத்துவர் இல்லாததால், ஆம்புலன்ஸ் உதவியுடன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


ஆம்புலன்ஸில் இருந்து இறங்க மறுத்த சரவணன் ஒரு கட்டத்தில் அங்கிருந்த இரும்பு கேட்டின் மீது ஏறி குரங்குபோல் நடந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவைதான் குரங்கு கடித்து சிகிச்சை பெற்று வந்தவர் குரங்குபோல் கேட்டின் மீது ஏறி சேட்டை செய்கிறார் எனத் தவறான தகவல் பரப்பப்படுகிறது.

முடிவு: 

குரங்கு கடிக்குச் சிகிச்சை பெற்று வந்தவர் குரங்குபோல் நடந்து கொண்டதாகப் பரவும் தகவல் தவறானது. மனநலம் பாதிக்கப்பட்ட நபரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது கேட்டின் மீது ஏறி குரங்குபோல் நடந்துகொண்டுள்ளார்.
  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க