YouTurn

சிங்கப்பூர் WHO-க்கு எதிராக கொரோனா நெறிமுறைகளை மாற்றியதா ?

சிங்கப்பூர் WHO-க்கு எதிராக கொரோனா நெறிமுறைகளை மாற்றியதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கோவிட் -19 சடலத்திற்கு பிரேத பரிசோதனை (பிரேத பரிசோதனை) செய்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. ஒரு முழுமையான விசாரணையின் பின்னர், கோவிட் -19 ஒரு வைரஸாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது, மாறாக ஒரு பாக்டீரியம் கதிர்வீச்சுக்கு ஆளாகி இரத்தத்தில் உறைதல் மூலம் மனித மரணத்தை ஏற்படுத்துகிறது.




Facebook link 

விரிவான விளக்கம்

சிங்கப்பூர் நாடானது உலகிலேயே முதல் முறையாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து நடத்திய விசாரணையில் கோவிட்-19 ஒரு வைரஸ் இல்லை, பாக்டீரியா என கண்டறிந்ததாக தொடங்குகிறது அந்த நீண்ட ஃபார்வர்டு தகவல்.



Archive link 

இத்தகவல் ஆங்கிலத்தில் வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் பரவத் துவங்கிய பிறகு தமிழில் மொழி மாற்றம் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ?

1. சிங்கப்பூர் கோவிட்-19 ஆல் இறந்தவரின் உடலை பிரதேப் பரிசோதனை செய்ததா ?



சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் முகநூல் பக்கத்தில் ஜூன் 7-ம் தேதி, " சிங்கப்பூர் அத்தகைய பிரேதப் பரிசோதனையை செய்யவில்லை. இந்த செய்தி கோவிட்-19 நோய்த்தொற்றின் நோய்குறியியல் தொடர்பான தவறான தகவல்களைக் கூறுகிறது. இது தற்போதைய ஆதாரங்களால் வெளியிடப்பட்டவை அல்ல. சிங்கப்பூருக்கு பதிலாக ரஷ்யாவைக் குறிப்பிட்டு பரப்பிய இச்செய்தியின் முந்தைய பதிப்பு பொய்யானது என அம்பலப்படுத்தப்பட்டது " என விளக்கத்தை அளித்து உள்ளது.

2. பிரதேப் பரிசோதனை செய்ய WHO எதிர்கிறதா ? 

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ய உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, அதற்கான வழிகாட்டுதல்களையே வழங்கி இருக்கிறது.

உலக நாடுகள் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்தும் இருக்கிறார்கள். ஏன், இந்தியாவில் கூட பிரேதப் பரிசோதனைகள் நிகழ்ந்து இருக்கிறது. 2020 அக்டோபர் இந்தியாவில் முதல் முறையாக பெங்களூரில் 61 வயது நோயாளியின் உடல் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்ட செய்திகள் பல வெளியாகி இருக்கின்றன.



தொடரும் வதந்திகள் :

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்து அது வைரஸ் இல்லை பாக்டீரியா, கதிர்வீச்சால் உண்டாகிறது, உலக சுகாதார அமைப்பின் நெறிமுறைகளை மாற்றி உள்ளார்கள், ஐ.சி.யு, வெண்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் தேவையில்லை கடந்த ஆண்டு முதலே வதந்திகள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க : இத்தாலி கோவிட்-19 மோசடியை அம்பலப்படுத்தியதா ?| வைரலாகும் சதிக் கோட்பாடு !

கடந்த ஆண்டு, இதைப் போன்ற ஃபார்வர்டு தகவல் உடன் இத்தாலி நாட்டைக் குறிப்பிட்டு பரவிய வதந்திகள் குறித்து நாம் உண்மையான தகவலை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு :

நம் தேடலில், சிங்கப்பூர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்தது, அது வைரசே இல்லை என பரப்பப்படும் நீண்ட ஃபார்வர்டு தகவல் முற்றிலும் வதந்தியே. வைரல் செய்யப்படும் தகவலை சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகமே மறுத்து உள்ளது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க