
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
டெல்லி வன்முறையில் ஈடுபட்ட கலகக்காரர்களால் இந்து-முஸ்லீம் மக்கள் ஒற்றுமையுடன் இருந்த பகுதிகளிலும் பெரியளவில் பாதிப்புகள் உருவாக்கப்பட்டன. பிற பகுதிகளில் இருந்து வந்தவர்களே சேதங்களை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளனர் என பொதுமக்கள் அளித்த பேட்டியில் பார்க்க முடிந்தது. டெல்லி வன்முறை சம்பவத்தில்...
பரவிய செய்தி

Facebook link | archived link
விரிவான விளக்கம்
டெல்லி வன்முறை சம்பவத்தில் இருந்து 60-70க்கும் மேற்பட்ட முஸ்லீம்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்ற சீக்கியரின் புகைப்படம் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிப்ரவரி 29-ம் தேதி The tribune india எனும் இணையதளத்தில் வெளியான செய்தியில், வன்முறையின் போது மொஹிந்தர் சிங் மற்றும் அவரது மகன் இந்திரஜித் சிங் ஆகியோர் தங்களின் புல்லட் மற்றும் ஸ்கூட்டி வாகனத்தைப் பயன்படுத்தி அப்பகுதியில் இருந்த 60-80 முஸ்லீம்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல உதவினர். வடகிழக்கு டெல்லியில் இந்துக்கள் அதிகம் இருக்கும் கோகுல்புரி பகுதியில் நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்து உதவியதாக " கூறப்பட்டுள்ளது.
huffingtonpost தளத்தில் இடம்பெற்ற தகவலில், " 53 வயதான மொஹிந்தர் தன்னிடம் மற்றும் தன் மகனிடம் இருந்த ஸ்கூட்டி மற்றும் புல்லட் வாகனத்தைப் பயன்படுத்தி கோகுல்புரி முதல் கர்தாம்புரி பகுதிக்கு 20 முறை அங்குள்ளவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் என 3 முதல் 4 பேர்களை ஒரே நேரத்தில் இருவரும் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது சிறுவர்களுக்கு தங்களிடம் இருந்து டர்பனை கட்டி முஸ்லீம்கள் என்பதை மறைத்து அழைத்துச் சென்றதாக " தெரிவித்து உள்ளார்கள்.
மொஹிந்தர் சிங் , " நான் இந்து அல்லது முஸ்லீம் என பார்க்கவில்லை. நான் மக்களைப் பார்த்தேன். நான் சிறு குழந்தைகளைப் பார்த்தேன். என் குழந்தைகள் போல அவர்களுக்கும் எதுவும் நடக்கக்கூடாது என்று உணர்ந்தேன். நாம் அனைவரும் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதால் இதைச் செய்தோம். நான் இதற்கு மேல் என்ன சொல்ல முடியும் ? " எனக் கூறியதாக huffingtonpost தளத்தில் இடம்பெற்று உள்ளது.
டெல்லி வன்முறையின் போது கோகுல்புரி பகுதி அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள மசூதிகள் எரிக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகின.
டெல்லி வன்முறையின் போது முஸ்லீம் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று உதவி செய்த மொஹிந்தர் சிங் மற்றும் அவரின் மகன் செயல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
Two Sikhs -- Inderjit Singh and Mohinder Singh -- risked their own lives to transport dozens of Muslim neighbors to safety.
These are the heroes our world needs today.https://t.co/vgnpYTtk4d
— Simran Jeet Singh (@SikhProf) February 28, 2020
'Meet Mohinder Singh, 53, and his son was on the Bullet motorcycle and he was on the scooty, and they made around 20 trips each from Gokalpuri to Kardampur in one hour. When it was women and children, they took three to four of them at a time. ❤️ #DelhiGenocide2020 #RealHero pic.twitter.com/0kAsk38Rjh
— Rehman Ifrahim (@Rehmanifrahim) February 28, 2020