YouTurn

ShopClues நிறுவனத்தின் பரிசு கூப்பன் என வீடு தேடி வரும் மோசடி !

ShopClues நிறுவனத்தின் பரிசு கூப்பன் என வீடு தேடி வரும் மோசடி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

Shopclues நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங்கில் வெற்றி பெற்றதால் கிடைக்கும் அதிர்ஷ்ட கூப்பன் என வீட்டிற்கு வரும் சான்றிதழ் மற்றும் கூப்பன் கோட்கள் !

விரிவான விளக்கம்

ஆன்லைன் வணிக தளமான Shopclues நிறுவனத்தின் சார்பில் ரூ.1 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான பரிசு கூப்பன் உங்களுக்கு கிடைத்துள்ளதாக வரும் போன் அழைப்புகள், மெசேஜ், வீடு தேடி லெட்டர் மூலம் கூப்பன்கள் அனுப்பப்படுகிறது

தமிழ்நாட்டில் கூரீயரில் என் நண்பருக்கு பரிசு கூப்பனை அனுப்பப்பட்டதாக யூடர்ன் தளத்திற்கு கூப்பன்களின் இவ்விரு புகைப்படங்கள் அனுப்பி இருந்தனர். இதுபோன்ற அழைப்புகள், மெஜேஜ்கள் ஆகியவை மோசடி கும்பல்களால் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

Shopclues நிறுவனம் பரிசு கூப்பன் வழங்கும் எந்தவொரு கான்டெஸ்டையும் நடத்தவில்லை. ட்விட்டரில் Shopclues நிறுவனத்தின் பெயரில் வரும் லக்கி கூப்பன்கள் பற்றி அந்நிறுவனத்திடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்ததோடு இதுபோன்ற மோசடிக்குள் சிக்க வேண்டாம் என கடந்த ஆண்டில் இருந்தே பதில் அளித்து வருகிறது.



Archive link



Archive link

மேலும் படிக்க : Snapdeal நிறுவனம் பெயரில் கார் பரிசளிப்பதாக மோசடி| மெசேஜ்களை நம்பி பணத்தை இழக்காதீர்!

இதற்கு முன்பாக, Snapdeal ஆன்லைன் வணிக தளத்தில் உங்களுக்கு 12 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா கார் பரிசாக விழுந்துள்ளதாக வரும் மோசடி அழைப்புகள், மெஜேஜ்கள் குறித்து நாம் முன்பே கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

இதுபோன்ற மோசடி கும்பல்கள், உங்களின் தனிப்பட்ட வங்கி விவரங்கள் அல்லது முன்பணம் செலுத்த வேண்டும் என உங்களை பணத்தை இழக்கும் நிலைக்கு தள்ளுகிறார்கள். பரிசு கூப்பன் என வரும் மோசடிக்குள் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள் !
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க