YouTurn

Shin chan கார்ட்டூன் தொடர் உண்மையான கதையா ?

Shin chan கார்ட்டூன் தொடர் உண்மையான கதையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“ Crayon shin Chan ” என்ற ஜப்பானை சேர்ந்த கார்டூன் தொடருக்கு குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் மொழியில் மாற்றப்பட்ட ஷின் சான் கார்டூன் தொடர், கடந்த சில மாதங்களாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஷின் சான் தொடரைப்...

பரவிய செய்தி

நாம் அனைவரும் விரும்பி பார்த்து வரும் “ ஷின் சான் ” கார்ட்டூன் தொடரில் வரும் ஷின் சான் என்ற குழந்தையின் கதாபாத்திரம் உண்மையான சம்பவம் ஆகும். ஐந்து வயதான ஷின் சான், தனது தங்கையான ஹிமாவாரியை மோத வந்த காரில் இருந்து காப்பாற்றும் போது விபத்தில் சிக்கி இறந்தான் என்பதை பலரும் அறிய வாய்ப்பில்லை.

விரிவான விளக்கம்

“ Crayon shin Chan ” என்ற ஜப்பானை சேர்ந்த கார்டூன் தொடருக்கு குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் மொழியில் மாற்றப்பட்ட ஷின் சான் கார்டூன் தொடர், கடந்த சில மாதங்களாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஷின் சான் தொடரைப் பார்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



      அத்தொடரின் சிறப்பு அம்சமே " ஷின் சான் " என்ற குழந்தை செய்யும் குறும்புகள் தான். தன்னை சுற்றி உள்ளவர்களை கிண்டல், கேளிகள் செய்வதோடு சில சமயம் கோபமடையக் கூடச் செய்வான் அச்சிறுவன். தமிழில் டப் செய்த விதம் கணக்கச்சிதமாக பொருந்திருக்கும். குறிப்பாக அவன் பேசும் “ அமைதி அமைதி அமைதியோ அமைதி “ என்ற சிறந்த வசனம் பலரையும் கவர்ந்த ஒன்றாகும்.


இவ்வாறு இருக்கையில், ஷின் சான் குழந்தையின் கதாபாத்திரம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்றும், 5 வயதான ஷின் சான் தனது தங்கை ஹிமாவாரியை காரில் இருந்து காப்பாற்றும் போது விபத்தில் சிக்கி இறந்ததாக செய்திகள் வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், அத்தொடரின் இறுதி எபிசொட் ஆனது ஷின் சான் இறந்து போவதாக அமைத்திருக்கும். எனவே, அக்காட்சியை நிறுவனம் நீக்கியதாக கூறி வருகின்றனர். இது பலரின் மனதை வேதனை அடையச் செய்தது.


ஆனால், இச்செய்திகள் அனைத்தும் தவறானவை ஆகும். ஷின் சான் கார்டூன் கதாபாத்திரம் கற்பனை என்று அத்தொடரை உருவாக்கிய “ யோஷியோ உசூய் ” தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். கற்பனையான கதாபத்திரத்தை இறந்ததாகக் கூறி வதந்தியை பரப்பியுள்ளனர்.


ஆக, ஷின் சான் பற்றிய தவறான செய்திக்கு ஷின் சான் வடிவிலே கூற வேண்டும் என்றால், வதந்தி! வதந்தி! வதந்தியோ வதந்தி, வதந்திகேல்லாம் வதந்தி.

சுருக்கமாக

கார்ட்டூன் தொடரான " ஷின் சான் " குழந்தையின் கதாபாத்திரம் கற்பனை கதை என்று அதை உருவாக்கியவரே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். இதையறியாமல், ஷின் சான் இறந்து விட்டதாகக் கூறி வலைதளங்களில் தவறான செய்திகளை வைரலாக்கி உள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க