யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
மில்லியன் யுவான் RMB மொத்த முதலீடான ஷாங்காய் நண்பன் பாலம் ஆசியாவிலேயே முதல் பாலமாகும்.

Facebook link | Archive link 1

Facebook link | Archive link 1
விரிவான விளக்கம்
சீனா தன் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வரும் தகவல்கள் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் உருவாக்கப்பட்ட நண்பன் பாலத்தின் கண்கவர் காட்சி என இவ்வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது. வெறும் 9 நொடிகள் கொண்ட வீடியோ கூட 1 மில்லியன் பார்வையை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
சீனாவில் உள்ள நண்பன் பாலம் என ஆங்கிலத்தில் தேடுகையில் ஷாங்காய் பகுதியில் உள்ள Nanpu bridge என்கிற புகைப்படங்கள், வீடியோக்களுடன் கூடிய முடிவுகள் கிடைத்தன. 1991-ம் ஆண்டில் Nanpu bridge ஹுவாங்பூ நதியின் மீது கட்டப்பட்டது.
அதுமட்டுமின்றி, Nanpu bridge பாலத்தில் இருந்து வட்ட வடிவில் செல்லும் சாலை தொடர்பாக இணையத்தில் கிடைத்த வீடியோவில் இடம்பெற அமைப்பும், வைரல் செய்யப்படும் வீடியோவும் வேறாக இருப்பதை பார்க்கலாம்.

வைரல் செய்யப்படும் 9 நொடிகள் கொண்ட வீடியோவை உன்னிப்பாக கவனித்தால், " பாலத்தில் அடுத்தடுத்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஒரே மாதிரியாக இருப்பதை பார்க்க முடியும். முதல் 6 சாலைகளில் செல்லும் வாகனங்களே இறுதியாக உள்ள பகுதி வரைக்கும் உள்ள சாலைகளில் செல்வதை பார்க்கலாம்.

வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஷாங்காய் பகுதியில் உள்ள Nanpu bridge-ஐ வைத்து டிக்டாக்விற்காக எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் கிடைத்தன. அவையும், வைரல் செய்யப்படும் வீடியோ போன்றே இருப்பதை பார்க்க முடிந்தது.

முடிவு :
நம் தேடலில், சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ள நண்பன் பாலத்தின் காட்சி என வைரல் செய்யப்படும் வீடியோ பாலத்தின் உண்மையான தோற்றத்தை வைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.