YouTurn

சீமான் தன் மகனுக்கு திருப்பதியில் துலாபாரம் கொடுத்த புகைப்படமா ?

சீமான் தன் மகனுக்கு திருப்பதியில் துலாபாரம் கொடுத்த புகைப்படமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

முப்பாட்டன்.. முப்பாட்டன்னு தம்பிக கிட்ட சொல்லிட்டு சைஸா அண்ணன் மட்டும் திருப்பதியில போய் தன் மகனுக்கு துலாபாரம் கொடுத்தாரு பாருங்க.. ஏமிரா இதி



Twitter link | Archive link

விரிவான விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மகன் மற்றும் மனைவியுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று துலாபாரம் கொடுத்ததாக இப்புகைப்படம் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது.







திருப்பதி எனக் கூறி ஒருபுறம் பரவினாலும், மறுபுறம் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டதாக பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது. இதுகுறித்து பதிவிடுமாறு யூடர்னை டக் செய்தும் கமெண்ட் செய்து இருந்தனர்.

உண்மை என்ன ? 

ஸ்ரீரங்கம் கோவிலில் சீமான் துலாபாரம் கொடுத்ததாக பகிரப்பட்ட புகைப்படங்களில் ஒன்றில் " துலாபாரம் " என தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிந்தது. இதை வைத்தே ஸ்ரீரங்கம் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.



கமெண்ட்களில் சிலர் ஸ்ரீரங்கம் கோவில், திருப்போரூர் முருகன் கோவில் என பதிவிட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் குறித்து தேடிய போது கீழ்காணும் வீடியோ கிடைத்தது.



இந்த வீடியோவில் 3.40வது நிமிடத்தில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் தராசு, பெயர் பலகை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் திருப்போரூர் முருகன் கோவிலில் தன் மகனுக்கு துலாபாரம் கொடுத்த போது சீமான் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஸ்ரீரங்கம், திருப்பதி என தவறாக பரப்பப்பட்டு வருகிறது.



மேலும் படிக்க : அத்திவரதரை தன் குடும்பத்துடன் சென்று தரிசித்தாரா சீமான் ?  

இதற்கு முன்பாக கூட, சீமான் தன் குடும்பத்துடன் அத்திவரதர் கோவிலுக்கு சென்றதாக தவறானப் புகைப்படத்தை வைரலானது குறித்து நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு : 

நம் தேடலில், சீமான் தன் மகனுக்கு துலாபாரம் கொடுக்கும் புகைப்படம் திருப்பதியில் அல்லது ஸ்ரீரங்கத்தில் எடுக்கப்பட்டது அல்ல, திருப்போரூர் முருகன் கோவிலில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க