யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ். அரசியல் என சமுத்திரகக்கனி கூறியதாகப் பரப்பப்படும் புதியதலைமுறை நியூஸ்கார் போலியாக எடிட் செய்யப்பட்டது
பரவிய செய்தி
சமத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமைக்காக போராடிய தந்தை பெரியாரைப் பற்றி அவதூறு பரப்புவது மிக மோசமானது.
சீமான் செய்வது அயோக்கியத்தன அரசியல் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் அரசியல். -இயக்குநர் சமுத்திரக்கனி

விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பொய்யான தகவல்களை பேசியது தமிழ்நாடு முழுவதும் பெரியார் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சீமானின் பேசியதற்கு பல்வேறு இயக்கங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்!
சீமான் செய்வது அயோக்கியத்தனமான அரசியல் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் அரசியல் -இயக்குனர் சமுத்திரக்கனி pic.twitter.com/Vk58b5M5Gk
இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்! சமத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமைக்காக போராடிய தந்தை பெரியாரைப் பற்றி அவதூறு பரப்புவது மிக மோசமானது எனக் கூறியதாக புதியதலைமுறை ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
உண்மை என்ன?
பரப்பப்படும் நியூஸ் கார்டில் ’10.01.2025 (11:00AM)’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு புதியதலைமுறை ஊடகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடுகையில், அப்படி எந்த எய்தியும் வெளியிடப்படவில்லை எனத் தெரியவந்தது.
மேற்கொண்டு இத்தகைய கருத்து ஏதும் சீமான் குறித்து சமுத்திரக்கனி கூறியுள்ளாரா என்பது குறித்தும் தேடினோம். அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்திலோ அல்லது ஊடகத்திலோ அப்படி எந்த செய்தியும் இல்லை.

இதிலிருந்து பரவும் தகவல் தவறானது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. மேலும் புதியதலைமுறை நியூஸ் கார்டு போலவே போலியாக எடிட் செய்து உருவாக்கப்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.
முடிவு:
சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல் என சமுத்திரக்கனி கூறியதாகப் பரப்பப்படும் புதியதலைமுறை நியூஸ்கார் போலியாக எடிட் செய்யப்பட்டது. சமுத்திரக்கனி அப்படி எந்த கருத்தையும் கூறவில்லை.