YouTurn

பிரபாகரன் தன் காலில் விழுந்ததாக சீமான் கூறினாரா ?

பிரபாகரன் தன் காலில் விழுந்ததாக சீமான் கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தன் காலில் விழுந்தார் எனக் கூறியதாக ஓர் வீடியோ முகநூலில் வைரலாகி வருகிறது. அரசியல் நையாண்டி, Reel anthu pochu உள்ளிட்ட முகநூல் பக்கங்களில் வெளியான வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருவதை பார்க்க முடிந்தது...

பரவிய செய்தி

பிரபாகரன் என் காலில் விழுந்தார் - சீமான். பிரபாகரனை எலியை விட சிறுமை படுத்திய பெருமை இவரையே சாரும் !



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தன் காலில் விழுந்தார் எனக் கூறியதாக ஓர் வீடியோ முகநூலில் வைரலாகி வருகிறது. அரசியல் நையாண்டி, Reel anthu pochu உள்ளிட்ட முகநூல் பக்கங்களில்  வெளியான வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருவதை பார்க்க முடிந்தது.





36 நொடிகள் கொண்ட வீடியோவில், " இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சின்ன சின்ன இயக்கங்கள், அதே மாதிரி திரைத்துறையில் இருந்து சேரன், அமீர், பாலா என எல்லார் குறித்தும் பேசி இருக்கோம். தங்கர்பச்சான், தம்பி கெளதமன் எல்லார் குறித்தும்.. அதில அண்ணன் சத்யராஜ்.. இப்படி பேசிட்டே இருக்கும் போது தமிழ் திரைப்பட உலகம்.. நமக்குன்னு ஒரு அடையாளம் என்ன மிச்சம் இருக்கு.. ஆ நடிகர் திலகம் இருக்காங்க, இப்ப விட்டா நம்ம வடிவேலு.. வேற யாரு நமக்கு அடையாளமா தெரிலைங்க அப்படினு சொல்லும் போது.. அத வந்து நா அவர்கிட்ட சொன்னேன்.. தெய்வமே அப்படினு.. என் கால்ல இல்ல அங்க விழ முடியலல " எனக் கூறி இருக்கிறார்.

உண்மை என்ன ? 

வீடியோவின் மேலே விகடன் டிவி என இருக்கும் லோகோ உள்ளது. சீமான் விகடனுக்கு அளித்த பேட்டி குறித்து தேடிய பொழுது 2020 மே 18-ம் தேதி " Tasmac திறந்ததால் எல்லா இடங்களிலும் கொலை கொள்ளை! " என்ற தலைப்பில் வெளியான வீடியோ கிடைத்தது.



Youtube link | archive ink

வீடியோவில் 8.50 நிமிடத்தில் பேட்டி எடுப்பவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் திரையில் வருவது தொடர்பாக நீங்கள் ஏதும் முயற்சிகள் எடுத்து உள்ளீர்களா என சீமானிடம் கேட்ட பொழுது, அவர் உருவாக்கப்பட்ட கலைஞன் அல்ல. பிறவிலேயே திறன் இருக்குனு நிறைய பேர் சொல்லுவாங்க. ஆனால் இவரை பொறுத்த வரைக்கும் அதை நம்பிதான் ஆகணும். அசாத்திய கலைஞன். ஈழத்தில் நானும் எங்கள் தலைவரும் பேசிட்டு இருக்கும் போது எல்லாம் குறித்து பேசுவோம். அரசியல மாக, இக நிலைப்பாடு குறித்தும் கூட பேசுவோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சின்ன சின்ன இயக்கங்கள், அதே மாதிரி திரைத்துறை இருந்து சேரன், அமீர், பாலா என எல்லார் குறித்தும் பேசி இருக்கோம். தங்கர்பச்சான், தம்பி கெளதமன் எல்லார் குறித்தும்.. அதில அண்ணன் சத்யராஜ் என எல்லாத்தையும் பேசுவோம். இப்படி பேசிட்டே இருக்கும் போது அவரு (பிரபாகரன்) தமிழ் திரைப்பட உலகம்.. நமக்குன்னு ஒரு அடையாளம் என்ன மிச்சம் இருக்கு.. ஆ நடிகர் திலகம் இருக்காங்க, இப்ப இதை விட்ட நம்ம வடிவேலு.. வேற யாரு நமக்கு அடையாளமா தெரிலைங்க அப்படினு சொல்லும் போது.. அத வந்து நா அவர்கிட்ட(வடிவேலு) சொன்னேன்.. தெய்வமே அப்படினு.. ஹே என் கால்ல இல்ல.. அங்க விழ முடியலல " எனப் பேசியுள்ளார்.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தனது காலில் விழுந்தார் என சீமான் கூறியதாக பரவும் வீடியோ தவறாக பரப்பப்படும் ஒன்று என தெரிந்து கொள்ள முடிகிறது. தவறான வீடியோக்களை பகிர வேண்டாம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க