YouTurn

திமுக எம்.பி செந்தில்குமார் பற்றி சீமான் செய்தியாளர்களிடம் சொன்ன பொய் செய்தி !

திமுக எம்.பி செந்தில்குமார் பற்றி சீமான் செய்தியாளர்களிடம் சொன்ன பொய் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் செந்தில், பெரியாரை நான் பார்த்ததில்லை.ஆனால் காக்கி சட்டையில் உதயநிதி அவர்களை பார்த்த பிறகு மெய்சிலிர்த்து பெரியாரை பார்த்த மாறி இருக்கிறது.



Youtube | Archive link 

விரிவான விளக்கம்

மே 22 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை திமுகவினர் விளம்பரப்படுத்துவதை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.

அப்போது, " திமுகவின் எம்.பி செந்தில்குமார், பெரியாரை நான் பார்த்ததில்லை. ஆனால் காக்கி சட்டையில் உதயநிதி அவர்களை பார்த்த போது மெய்சிலிர்த்து பெரியாரை பார்த்த மாறி இருக்கிறது எனக் கூறி உள்ளதாக " பேசியுள்ளார்.



உண்மை என்ன ? 

சீமான குறிப்பிட்டது போல் உதயநிதி வடிவில் பெரியாரைப் பார்ப்பதாக பேசியது திமுகவின் தர்மபுரி எம்.பி செந்தில்குமார் அல்ல, ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கமே அதை வெளியிட்டு இருந்துள்ளது.



Archive link 

இந்த போலியான ட்விட்டர் பக்கத்தில் மே 20-ம் தேதி,” பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை . இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது .. இந்த ஆண்டின் மிகச் சிறந்த திரைக்காவியமாக நெஞ்சுக்கு நீதி இருக்கும், உலகளில் பல்வேறு விருதுகளை உறுதியாக வெல்லும்” எனப் பதிவாகி இருக்கிறது. இந்த போலி ட்வீட் குறித்து முன்பே நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : உதயநிதி வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் எனச் செந்தில்வேல் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !



Archive link  

இதுகுறித்து எம்.பி செந்தில்குமார், " பொய்யர் சீமான் பொய் மட்டும் தான் பேசுவார் என்பதற்கு இது சான்று. நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமூக நீதி பேசும் படம் என்று தமிழர்கள் கொண்டாடும் திரைப்படம். ஆனால் நான் பதிவிடாத, சொல்லாததை கூச்சமே இல்லாமல் சொல்கிறார் " என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

முடிவு :

நம் தேடலில், பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பெரியாரை நான் பார்த்ததில்லை. ஆனால் காக்கி சட்டையில் உதயநிதி அவர்களை பார்த்த போது மெய்சிலிர்த்து பெரியாரை பார்த்த மாறி இருக்கிறது என கூறியதாக சீமான் பேசியது பொய்யான செய்தி, அவர் அப்படி பேசவில்லை என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க