YouTurn

தேர்தல் முடிந்த பிறகும் ஆம்ஸ்ட்ராங்கிடம் துப்பாக்கி ஒப்படைக்கவில்லை எனச் சீமான் பேசிய தவறான தகவல்!

தேர்தல் முடிந்த பிறகும் ஆம்ஸ்ட்ராங்கிடம் துப்பாக்கி ஒப்படைக்கவில்லை எனச் சீமான் பேசிய தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (05/07/2024) மாலை 7 மணியளவில் அவரது வீட்டின் அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். இப்படுகொலையில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் கொலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”எனக்குத் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி தரவில்லை. அவருக்கு (ஆம்ஸ்ட்ராங்) கொடுத்திருந்தீர்கள். அதனை அவர் தேர்தல் நேரத்தில் ஒப்படைத்திருந்தார். தேர்தல் முடிந்ததும் திருப்பிக்கேட்டார். ஏன் கொடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பரவிய செய்தி

ஆம்ஸ்ட்ராங் தேர்தல் நேரத்தில் ஒப்படைத்த துப்பாக்கியை ஏன் அவரிடம் திருப்பி அளிக்கவில்லை. -சீமான்
                                                 
 

விரிவான விளக்கம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (05/07/2024) மாலை 7 மணியளவில் அவரது வீட்டின் அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். இப்படுகொலையில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங்கின் கொலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”எனக்குத் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி தரவில்லை. அவருக்கு (ஆம்ஸ்ட்ராங்) கொடுத்திருந்தீர்கள். அதனை அவர் தேர்தல் நேரத்தில் ஒப்படைத்திருந்தார். தேர்தல் முடிந்ததும் திருப்பிக்கேட்டார். ஏன் கொடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 



அதாவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு இணங்க ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஒப்படைத்த துப்பாக்கியை, அவர் திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை எனச் சீமான் பேசியுள்ளார். 

உண்மை என்ன?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாகச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் வைத்திருந்த துப்பாக்கி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்குப் பதிலளித்த ஆணையர், அவரிடம் (ஆம்ஸ்ட்ராங்) முறையாக உரிமத்துடன் துப்பாக்கி உள்ளது. அந்த உரிமம் 31.12.2027 வரைக்கும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு இணங்க மார்ச் மாதம் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளார். தேர்தல் முடிந்ததும் ஜூன் 13ம் தேதி துப்பாக்கியைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் எனக் கூறியுள்ளார். 



இதிலிருந்து ஆம்ஸ்ட்ராங்கின் துப்பாக்கி அவரிடம் ஒப்படைக்கவில்லை எனச் சீமான் பேசியது தவறான தகவல் என்பதை அறியமுடிகிறது. 


ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதாக திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பினர். அப்படி எந்த கார்டும் புதிய தலைமுறை வெளியிடவில்லை. அது போலியாக உருவாக்கப்பட்டது. அவர் மீது 7 வழக்குகள் இருந்தது என்றும் அவ்வழக்குகள் அனைத்திலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்

முடிவு? 

தேர்தல் நடத்தை விதிகளுக்கு இணங்க ஆம்ஸ்ட்ராங் ஒப்படைத்த துப்பாக்கியை, அவர் கேட்டும் ஒப்படைக்கவில்லை எனச் சீமான் பேசியது தவறான தகவல். கடந்த ஜூன் 13ம் தேதி அவரிடம் துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க