யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
டிசம்பர் 27ம் தேதி வெளியான குமுதம் ரிப்போர்டர் புத்தகத்தில், " அண்ணனுக்கு டபுள் ஆம்லேட்! தன்னைப்போலவே முஷ்டி உயர்த்தி முழங்கும் உக்கிரம்மாள் ஒருவரை இப்போதெல்லாம் தங்கை என்று அழைப்பதில்லையாம் அண்ணன். விஷயத்தைக் கேள்விப்பட்ட அண்ணியார் கட்சிக்குள்ளேயே தனக்கு விசுவாசமான பெண்ணொருவரிடம் உக்கிரம்மாளைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். விஷயத்தை ஊகித்த எதிர்த்தரப்போ, யாரை யார் வேவு பார்ப்பது? வீட்டில் தான் அவர் உனக்குச் சொந்தம் வெளியில் வந்துவிட்டால் எனக்கே சொந்தம் என்று உஷ்ணமாகியிருக்கிறது. கத்திரிக்காய்கள் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் " என்ற பகுதி இடம்பெற்று இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் அவர்களையும் குறிப்பிட்டு இப்படியொரு செய்தியை குமுதம் வெளியிட்டு இருப்பதாக இப்படத்தை கடுமையான விமர்சனங்களுடன் திமுக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் குமுதம் ரிப்போர்டர் புத்தகத்தின் பக்கம் குறித்து தேடுகையில், டிசம்பர் 27ம் தேதி " திமுகவை உலுக்கும் என்.ஐ.ஏ. மீண்டும் புலிகள்... ஆயுதக் குவியல் ? " எனும் தலைப்பில் வெளியான புத்தகம் கிடைத்தது.

மேற்காணும் புத்தகத்தின் 4ம் பக்கத்தில், சீமான் மற்றும் காளியம்மாள் பற்றி இடம்பெற்றதாகப் வைரல் செய்யப்படும் செய்தி போன்று ஏதும் இடம்பெறவில்லை.

மாறாக, " பீகாரில் கள்ளச்சாராய மோதல்! பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் இறந்து போனார்கள். இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று பா.ஜ.க. போராடியது. "குடிகாரர்கள் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்ட முடியாது” என்று நிதிஷ்குமார் மறுத்துவிட்டார். கள்ளச்சாராயத்தை தடுக்கும் நிர்வாகம் நிதீஷ்க்குத் தெரியவில்லை என்று பா.ஜ.க. போர்க்கொடி எழுப்பிவருகிறது " என்ற செய்தியே வெளியாகி இருக்கிறது.

மேற்காணும் குமுதம் ரிப்போர்ட்டர் புத்தகத்தில் அவதூறு பரப்பும் வகையில் போலியான செய்தியை எடிட் செய்து பரப்பி இருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், டிசம்பர் 27ம் தேதி வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் புத்தகத்தில் சீமான், காளியம்மாள் பற்றி வெளியாகிய செய்தி எனப் பரப்பப்படும் பக்கம் எடிட் செய்யப்பட்டது. அவதூறு பரப்பும் வகையில் போலியான செய்தியை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

The what !! அண்ணன் 50 வயசுக்கு மேல ஜிம்முக்கு போற ரகசியம் இதானா ? pic.twitter.com/rfz567IiBB
— கோயம்புத்தூரான் (@Coimbatoraan) December 26, 2022