YouTurn

தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் சீமானின் பெயர் சைமன் எனக் குறிப்பிடப்பட்டதா ?

தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் சீமானின் பெயர் சைமன் எனக் குறிப்பிடப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பெயர் குறித்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் எழுப்பப்படும். அரசியலில் அவரால் எதிர்க்கப்படுபவர்கள் சீமானின் பெயரை சைமன் எனக் குறிப்பிட்டு விமர்சனம் செய்வதை சமூக வலைத்தளங்களில் அதிகம் காணலாம். இந்நிலையில், 2016 தமிழக சட்டமன்ற...

பரவிய செய்தி

2016 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சீமானின் தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் சைமன் என அவரின் பெயர் இடம்பெற்று உள்ளதாக கீழ் காணும் பத்திரம் பரவி வருகிறது.

விரிவான விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பெயர் குறித்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் எழுப்பப்படும். அரசியலில் அவரால் எதிர்க்கப்படுபவர்கள் சீமானின் பெயரை சைமன் எனக் குறிப்பிட்டு விமர்சனம் செய்வதை சமூக வலைத்தளங்களில் அதிகம் காணலாம்.

இந்நிலையில், 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் சீமான் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தில் சீமானின் பெயர் சைமன் எனவும், அவர் தந்தை பெயர் சபஸ்டியன் என்றும், சைமன் என கையொப்பமும் இடம்பெற்று இருக்கிறது. அவை தற்போது பகிரப்பட்டு வருகிறது மற்றும் Youturn-யிடம் பரவி வரும் பத்திரம் பற்றி கேள்விகளும் எழுப்பி இருந்தனர்.



கடந்த முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் சீமான் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் வேட்பு மனுவின் வேட்பாளர் அளிக்க வேண்டிய உறுதிமொழிப் பத்திரத்தில் , " செந்தமிழன் என்பவரின் மகனும் 50 வயதுடைய வெங்கடேசன் நகர் 2-வைத்து குறுக்குத் தெரு, விருகம்பாக்கம், சென்னை 92 என்ற முகவரியில் வசிக்கின்ற, இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளருமாகிய சீமான் என்கிற நான், இதனால் சத்தியபிரமாணம் செய்து, கீழ்கண்டவாறு உறுதியளிக்கிறேன் " எனக் கூறி சீமான் என்றே கையெழுத்தியிட்டு உள்ளார்.





சீமான் அளித்த அசல் உறுதிமொழிப் பத்திரத்தில் அவர் தந்தையின் பெயரை சபஸ்டியன் என்றும், சீமானின் பெயரை சைமன் என்றும், சைமன் என போலியான கையெழுத்தை வைத்து வதந்தியை பரப்பி வருகின்றனர். அசல் பத்திரத்தின் அடிப்படையில் பரவி வருபவை வதந்திகள் என நிரூபணமாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஃபோட்டோஷாப் செய்து வதந்தியை பரப்புவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.