YouTurn

சீமான் வீட்டுக்கு வீடு கார் தருவதாக கூறினாரா? | எந்த "கார்" ?

சீமான் வீட்டுக்கு வீடு கார் தருவதாக கூறினாரா? | எந்த "கார்" ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் வருகிற தேர்தலில் வீட்டுக்கு வீடு கார் கொடுப்பேன் என்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளேன் என பேசியதாக ஊடகங்களில் வெளியாகி விவாதமாகவும், சமூக வலைதளங்களில் கண்டனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது. Facebook link சீமான் தேர்தல்...

பரவிய செய்தி

வரும் தேர்தலில் வீட்டிற்கு இலவசமாக கார் என்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளேன் - சீமான்.

விரிவான விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் வருகிற தேர்தலில் வீட்டுக்கு வீடு கார் கொடுப்பேன் என்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளேன் என பேசியதாக ஊடகங்களில் வெளியாகி விவாதமாகவும், சமூக வலைதளங்களில் கண்டனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.



Facebook link 

சீமான் தேர்தல் அறிக்கையில் கார் அளிப்பதாக கூறியதாக தந்தி டிவி செய்தியில் வெளியான நியூஸ் கார்டை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆனால், சில பதிவுகளில் மட்டுமே அவர் " எந்த கார் " வழங்குவதாக கூறினார் என்பது வெளியாகி இருக்கிறது.



Facebook | archived link

மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், "ஏதாவது செய்து மேலே வந்துவிடுங்கள் என நண்பர்கள் என்னிடம் கூறுகின்றனர். அதனால் வரும் தேர்தலில் வீட்டுக்கு வீடு ஓர் காரினை இலவசமாக கொடுப்பதாக தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளேன்.



Video archived link 

சீமான் கார் தருகிறார் என அனைவரும் எனக்கு வாக்களித்து பெற்றி பெற செய்து விடுவார்கள். நான் முதலமைச்சர் ஆன பிறகு கார் கொடுக்கும் திட்டம் அறிவித்து, ஒவ்வொரு வீடாகச் சென்று இதுதான் கார் என " அம்பேத்கார் " படத்தைக் கொடுப்போம். இவர்தான் உலகத்திலேயே பெரிய கார் அண்ணல் அம்பேத்கார், இவரின் படத்தை மாட்டுங்கள் எனச் சொல்வோம் " எனக் கூறியுள்ளார்.

சில நாட்களாக சீமானின் பேச்சுக்கள் எதிர்மறையான கருத்துக்களுக்கு அதிகம் உள்ளாகி வருவதை மக்களும் கவனித்து வருகின்றனர். ஈழ இறுதிப் போரில் உணவு உண்ட போது நிகழ்ந்த அனுபவம் என சீமான் பேசிய பேச்சுக்கள் கடுமையான கிண்டலுக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து, அவர் அடுத்த தேர்தலில் கார் வழங்குவதாக கூறிய நகைச்சுவை பேச்சை சிலர் கண்டித்தும், கிண்டல் செய்தும் வருகின்றனர். முழுமையான செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட வேண்டும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.