YouTurn

இந்து பெண்கள் அரபு நாட்டிற்குக் கடத்தப்படுவதாகப் பரவும் ஸ்கிரிப்டட் வீடியோ!

இந்து பெண்கள் அரபு நாட்டிற்குக் கடத்தப்படுவதாகப் பரவும் ஸ்கிரிப்டட் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோ. உண்மையில் நடந்த சம்பவம் கிடையாது.

பரவிய செய்தி

ஹிந்து சொந்தங்களுக்கான எச்சரிக்கைப் பதிவு. வெளிநாட்டில் வேலை என ஏமாற்றி ஹிந்து பெண்களை அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஒரு ஹிந்து இளைஞர்.

hindu girl kidnapped

X link

விரிவான விளக்கம்

வெளிநாட்டில் வேலை எனக் கூறி அழைத்துச் செல்லப்படும் இந்து பெண்கள் அரபு நாடுகளில் விற்கப்படுவதாகவும், இதனை ஒரு இந்து இளைஞர் தடுத்து நிறுத்தியதாகவும் வீடியோ ஒன்று பரப்பப்படுகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண்மணியும் இளைஞரும் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பெண்களை மீட்பதைக் காண முடிகிறது. 

உண்மை என்ன?

இந்து பெண்களை அரபு நாடுகளுக்குக் கடத்த இருந்தது தடுத்து நிறுத்தப்பட்டதாகப் பரவும் வீடியோவின், 11வது வினாடியில் disclaimer காட்டப்படுகிறது. அதில், ’இது பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டதுஎனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு இவ்வீடியோ குறித்துத் தேடியதில், 2023, பிப்ரவரி 12ம் தேதி இதன் முழு வீடியோ ’Naveen Jangra’ என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது. 

அப்பக்கத்தில் இது போன்று பல திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோக்கள் உள்ளன. பரவக் கூடிய வீடியோவில் பெண்களை மீட்கும் இளைஞரை மற்ற வீடியோக்களிலும் காண நேர்கிறது.

image.png

பொழுதுபோக்கு என்கிற பெயரில் இப்படிப் பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் உள்ளன. இவை அனைத்தும் மதம் தொடர்பான பொய் செய்தி பரப்பப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வீடியோவும் இந்து பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என்ற பொய் செய்தி மட்டுமின்றி, முஸ்லிம்களைக் குறிக்கும் வகையில் அரபு நாட்டிற்குக் கடத்துகின்றனர் என மத ரீதியில் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் வதந்தி பரப்புகின்றனர்.

முடிவு: 

அரபு நாட்டிற்குக் கடத்த இருந்த இந்து பெண்களை இளைஞர் ஒருவர் மீட்டதாகப் பரவும் வீடியோ உண்மையில் நடந்த சம்பவம் கிடையாது. அது திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோ.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க