யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோவாகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
”மாலை அணிந்திருக்கும் ஒரு சிறுவனை கிறிஸ்துவ பள்ளி நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்காமல் விரட்டுகின்றனர். அந்த சிறுவன் பள்ளி வாயிலுக்குள் நுழைய முயற்சிக்கும் போது, அவனை வெளியில் தள்ளிவிடுகின்றனர். இதனை கண்டித்து கூட்டம் சேர்ந்து பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குவாதம் நடக்கிறது. இதனை கண்டு போலீஸ் ஒருவர் தலையிட்டு பேசுகிறார். இதன்பின்னர், பள்ளி நிர்வாகிகள் சிறுவனிடம் மன்னிப்புக் கேட்டு அவனை பள்ளியில் சேர்த்துக்கொள்கிறார்கள்”. இந்த காட்சிகள் அடங்கிய 4.40 நிமிடக்கள் நீண்ட வீடியோவை இரண்டு பாகமாக பதிவிட்டு, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் அவர்களுக்கு இவ்வாறு அநீதி நடக்கிறது என்ற சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘3RD EYE’ என்ற யூட்யூப் தளத்தில் இந்த வீடியோ காணக்கிடைத்தது. இந்த வீடியோவின் Description-ல் ’இது போன்ற திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோக்கள் இந்த தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்த சிறுவீடியோக்கள் பொழுதுபோக்கிற்காகவும், விழிப்புணர்வு நோக்கத்திற்காகவும் மட்டுமே’ என்று Disclaimer குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

இந்த 3RD EYE’ என்ற யூட்யூப் தளத்தில் இதுபோன்ற பல scripted வீடியோக்கள் இருப்பதைக் காணலாம். Here. Here
மேலும், இரண்டு பாகங்களாக பிரித்துப் பரப்பப்படும் இந்த வீடியோவின் முதல் பாகத்தின் 15ஆவது நொடியிலே ‘இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோ’ என்பதை உணர்த்தும் Disclaimer குறிப்பு இருக்கிறது.

இதிலிருந்து, இந்த scripted வீடியோவை உண்மையென நினைத்து தவறாக பரப்புகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோவாகும். இதனை உண்மையென நினைத்து மதப் பிரிவினைவாத கண்ணோட்டத்தில் தவறாக பரப்புகின்றனர்.
