YouTurn

ஆசிரியர் மாணவியைத் திருமணம் செய்து கொண்டதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

ஆசிரியர் மாணவியைத் திருமணம் செய்து கொண்டதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட  வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சனாதன்..... டனாடன்.......  மாதா, பிதா குரு தெய்வம் ? அடங்கொப்பரானே இதுதான் மோடியின் "பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் (மகளை காப்பாற்று, மகளை படிக்க வை) திட்டமா ? நாட்டில் கல்வி  நன்றாகவே முன்னே ஏறுகிறது, 1,2,3,6,5 இனி இதை எப்படி கற்றுத்தருவான்


Facebook link

விரிவான விளக்கம்

வயதான ஆண் ஒருவர் இளம் வயது பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 

X Link 


அந்த வீடியோவில் “இவள் என் மாணவி. நான் இவளின் ஆசிரியர், இவளது பள்ளிக் கட்டணம் மிக அதிகமாகிவிட்டது.  பத்தாயிரம் ஆகிவிட்டது அவளால் கொடுக்க முடியவில்லை. அதனால் என்ன செய்வது என்று யோசித்தேன். நான் இவளை திருமணம் செய்து கொண்டேன், எனவே நாங்கள் திருமணம் செய்து கொண்டதால் நீங்கள் சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும், வேறு என்ன நீங்கள் எங்களை ஆசீர்வதியுங்கள்” என்று கூறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உண்மை என்ன? 

பரப்பப்படும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், இதே வீடியோ 2023, டிசம்பர் 27ம் தேதிAppan Dalan’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அவ்வீடியோவின் நிலைத்தகவலில் (Description) ‘புனிதமான உறவு’ என இந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அந்த யூடியூப் பக்கத்தில் இதே போன்று திருமணம் செய்யும் வீடியோக்கள் பல உள்ளது. குறிப்பாகப் பள்ளி சீருடையில் ஆசிரியரைத் திருமணம் செய்து கொண்டதாகப் பரவும் வீடியோவில் உள்ள அதே பெண் அதே உடையில் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்வது போன்ற வீடியோவும் அப்பக்கத்தில் உள்ளது. 



இவற்றைக் கொண்டு அது சித்தரித்து எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது. இதற்கு முன்னரும் இது போன்ற சித்தரிப்பு வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவிய போது அது குறித்த உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : வயதான புரோகிதருக்கும், பள்ளி மாணவிக்கும் திருமணம் நடப்பதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ !

முடிவு : 

நம் தேடலில், ஆசிரியர் ஒருவர் அவரது மாணவியைத் திருமணம் செய்து கொண்டதாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.