யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தனது பேரனின் மனைவியை மணக்க விரும்பிய 70 வயது மதிக்கத்தக்க வயதான முஸ்லிம் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
மாஷா அலா, அல்ஹம்துலில்லாஹ். இந்த அற்புதமான சம்பவத்தை கேளுங்கள். இந்த முஸ்லீம் சிறுவன் தனது இளம் மனைவியை தனது வயதான தாத்தாவிடம் ஹலாலா (இஸ்லாமிய கலாச்சாரத்தின்படி பெரியவர்களுடன் ஒரு இரவு உடலுறவு) செய்வதற்காக அனுப்பினான். தாத்தா தனது பேரனின் இளம் அழகான மனைவியை மிகவும் விரும்பினார்..
விரிவான விளக்கம்
தனது பேரனின் மனைவியை மணக்க விரும்பிய 70 வயது மதிக்கத்தக்க வயதான முஸ்லிம் என்று கூறி 2:20 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், முஸ்லிம் இளைஞர் ஒருவர் தனது மனைவிக்காக வயதான முதியவர் ஒருவருடன் சண்டையிடுவதையும், அந்த பெண் இளைஞருடன் வர மறுத்து, வயதானவரின் அருகில் அமர்ந்திருப்பதையும் காணமுடிகிறது.
மாஷா அலா, அல்ஹம்துலில்லாஹ்
— அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩 (@NaMo_Bharathan) August 21, 2024
இந்த அற்புதமான சம்பவத்தை கேளுங்கள்
இந்த முஸ்லீம் சிறுவன் தனது இளம் மனைவியை தனது வயதான தாத்தாவிடம் ஹலாலா' (இஸ்லாமிய கலாச்சாரத்தின்படி பெரியவர்களுடன் ஒரு இரவு உடலுறவு) செய்வதற்காக அனுப்பினான்
தாத்தா தனது பேரனின் இளம் அழகான மனைவியை மிகவும் விரும்பினார் pic.twitter.com/lttt7rX1cD
மேலும் இதே வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதையும் காணமுடிகிறது.
*#हलाला
— Kiritdan Gadhavi (@KiritdanGadhav9) July 8, 2023
ये मजहब की खूबसुर्ती
अपने ही दादाजी से बीवी का हलाला करवाया। दादाजी को इतना मज़ा आया कि उन्होंने बीवी परमानेंटली ही दबा ली। दादाजी तो दादाजी, बीवी भी बेवफा निकली* pic.twitter.com/03sSowCBgO
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை “Google Reverse Image Search” பயன்படுத்தி தேடிப் பார்த்ததில், இது உண்மையாக நடந்த சம்பவம் அல்ல, ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை அறியமுடிந்தது.
‘Sharmin Shakil’ என்ற யூடியூப் பக்கத்தில், பரவி வரும் வீடியோவின் முழுப் பகுதி கடந்த 2022 நவம்பர் 25 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும் வீடியோவின் விளக்கத்தில் “இது பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட வீடியோ” என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் தெளிவாகக் காணமுடிகிறது.

மேலும் இந்த யூடியூப் பக்கத்தில், இதுபோன்ற பல சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அனைத்து வீடியோக்களிலும், வெவ்வேறு கதாப்பாத்திரங்களில், ஒரே நபர்கள் மாறி மாறி நடித்திருப்பதையும் பார்க்கமுடிகிறது.

மொத்தத்தில், பொழுதுபோக்குக்காக சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோவை, தனது பேரனின் மனைவியை மணக்க விரும்பிய 70 வயது மதிக்கத்தக்க வயதான முஸ்லிம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தனது பேரனின் மனைவியை மணக்க விரும்பிய 70 வயது மதிக்கத்தக்க வயதான முஸ்லிம் என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ சித்தரிக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது.
