YouTurn

பண்டிட் கோழிக்கறி சாப்பிட்டதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

பண்டிட் கோழிக்கறி சாப்பிட்டதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சிக்கன் சாப்பிடும் பண்டிட்

X link

விரிவான விளக்கம்

பண்டிட் ஒருவர் கோழிக்கறி சாப்பிடுவதாக வீடியோ ஒன்றை திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர். அந்த வீடியோவில் தலையில் குடுமியும் நெற்றியின் குங்குமப் பொட்டும் வைத்துக் கொண்டு சிவப்பு நிற உடை அணிந்த வட மாநில இளைஞர் ஒருவர் சிக்கன் சாப்பிடுவது போல் காண்பிக்கப்படுகிறது.



உண்மை என்ன? 

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இதன் முழு வீடியோவை ‘சுஜித் பாண்டே’ (Sujeet pandey) என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. 



மேற்கொண்டு அந்த பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில், இது போன்ற பல வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும் தான் ஒரு நடிகர் என சுஜித் பாண்டே அப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 



அப்பக்கத்தில் கடத்தப்படும் பெண்களைக் காப்பாற்றுவது, வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களைக் காப்பாற்றுவது எனப் பல சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது. அப்படித்தான் பண்டிட் கோழிக்கறி சாப்பிடுவது போல் சித்தரித்து வீடியோ எடுத்துள்ளனர். இந்த சித்தரிப்பு வீடியோவை உண்மை எனத் தவறாகப் பரப்புகின்றனர்.

முடிவு : 

பண்டிட் ஒருவர் கோழிக்கறி சாப்பிட்டதாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க