YouTurn

தந்தி கிளப்பிய வதந்தி : பள்ளி ஆசிரியர்கள் செயலியில் வருகைப் பதியவில்லை என்றால் சம்பள பிடித்தம் !

தந்தி கிளப்பிய வதந்தி : பள்ளி ஆசிரியர்கள் செயலியில் வருகைப் பதியவில்லை என்றால் சம்பள பிடித்தம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் என தகவல்.

விரிவான விளக்கம்

" கல்வித்துறை அதிரடி திட்டம். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்கள் வருகை பதிவு. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் நடைமுறைக்கு வரும் திட்டம். காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என கல்வித்துறை வட்டாரம் தகவல் " என தந்தி டிவி சேனல் முக்கிய செய்தியாக வெளியிட்டது.



உண்மை என்ன ?

இதுகுறித்து தெரிந்து கொள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறையைத் தொடர்பு கொண்டு பேசிய போது, " இணைய வழியாக ஆசிரியர்களின் வருகைப் பதிவை மேற்கொள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், ஆகஸ்ட் 1-ம் தேதி பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு செயலி மூலம் காலை 10 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என வெளியாகும் செய்தி பொய்யானது. அப்படி ஏதும் அறிவிக்கப்படவில்லை" எனத் தெரிவித்து இருந்தனர்.



அதேபோல், தமிழ்நாட்டின் செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநர் தரப்பிலும் தந்தி டிவி வெளியிட்ட செய்தி பொய்யானது என ட்விட்டரில் TNDIPR பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் என தந்தி டிவி வெளியிட்ட செய்தி பொய்யானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க