YouTurn

தஞ்சை மாணவி தற்கொலையில் பள்ளி மீது விசாரணை தேவையற்றது என எஸ்றா சற்குணம் கூறினாரா ?

தஞ்சை மாணவி தற்கொலையில் பள்ளி மீது விசாரணை தேவையற்றது என எஸ்றா சற்குணம் கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டது அவரின் தனிப்பட்ட விருப்பம். கிறிஸ்தவத்தை பின்பற்ற அழைப்பது எங்கள் உரிமை. பிடிக்காவிட்டால் வேறு பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டும். தூய இருதய மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - பேராயர் எஸ்றா சற்குணம். 

விரிவான விளக்கம்

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் மீது விசாரணை செய்யக்கூடாது என பேராயர் எஸ்றா சற்குணம் கருத்துக் கூறியதாக புதியதலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் கண்டனத்துடன் பரவி வருகிறது.



Facebook link  



உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து புதியதலைமுறையின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், ஜனவரி 22-ம் தேதி எஸ்றா.சற்குணம் பற்றிய நியூஸ் கார்டு ஏதும் வெளியாகவில்லை. அதேபோல், தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராயர் எஸ்றா சற்குணம் கருத்துத் தெரிவித்ததாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.

ஆகையால், புதியதலைமுறையின் இணையதளப் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், இது போலியானது. நாங்கள் வெளியிடவில்லை " எனத் தெரிவித்து இருந்தனர்.



முடிவு : 

நம் தேடலில், மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டது அவரின் தனிப்பட்ட விருப்பம். கிறிஸ்தவத்தை பின்பற்ற அழைப்பது எங்கள் உரிமை. பிடிக்காவிட்டால் வேறு பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டும். தூய இருதய மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என பேராயர் எஸ்றா சற்குணம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க