YouTurn

எஸ்பிஐ வங்கி யோனோ செயலி மூலம் 45 நிமிடத்தில் 5 லட்சம் கடன் வழங்குகிறதா ?

எஸ்பிஐ வங்கி யோனோ செயலி மூலம் 45 நிமிடத்தில் 5 லட்சம் கடன் வழங்குகிறதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாரத் ஸ்டேட் வங்கி "YONO" செயலியின் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு 45 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதற்கான சுலப தவணை 6 மாதங்களுக்கு பிறகு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக முன்னணி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஒன் இந்தியா தமிழ், சமயம் தமிழ்...

பரவிய செய்தி

எஸ்பிஐ வங்கியின் அவசர கால திட்டம். 45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி. 6 மாதத்திற்க்குப் பின்பு தவணைக் காலம் தொடங்கும்.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

பாரத் ஸ்டேட் வங்கி "YONO" செயலியின் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு 45 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதற்கான சுலப தவணை 6 மாதங்களுக்கு பிறகு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக முன்னணி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளது.



ஒன் இந்தியா தமிழ், சமயம் தமிழ், இந்து தமிழ் திசை உள்ளிட்ட தமிழ் செய்தி இணையதளங்களில் ஃபார்வர்டு செய்யப்படும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல், டைம்ஸ் ஆப் இந்தியா, நியூஸ் 18 தெலுங்கு உள்ளிட்ட செய்தி தளங்களிலும் வெளியாகி இருக்கிறது.





ஆனால், அத்தகவலை பாரத் ஸ்டேட் வங்கி மறுத்துள்ளது. " யோனோ செயலி " மூலம் அவசரகால கடன்களை வழங்குவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். தற்போது அதுபோன்ற எந்தவொரு கடனும் வழங்கப்படவில்லை " என எஸ்பிஐ வங்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.



Twitter link | archive link 

இருப்பினும், கோவிட்-19 நெருக்கடியால் பணப்புழக்க சிக்கல்களை எதிர்கொள்ளும் சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக யோனோ செயலி மூலம் முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் வழங்கலை அறிமுகப்படுத்தும் பணியில் உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்து உள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க