யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
சவூதி அரேபியவில் கண்டு எடுக்கப்பட்ட சரஸ்வதி சிலை இந்து சொந்தங்கள் அனைவர்க்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

X link | Archive link

X link | Archive link
விரிவான விளக்கம்
இந்துக்களால் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சவூதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட சரஸ்வதி சிலை எனப் புகைப்படம் ஒன்றினை பாஜக-வை சேர்ந்த மீஞ்சூர் சலீம் உட்படப் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
சவூதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட சரஸ்வதி சிலை எனப் பரவும் படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமெஜ் சேர்ச் மூலம் தேடியதில், அது சைப்பிரசு (Cyprus) என்னும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ’அப்ரோடைட்’ என்பவரது சிலை என்பதை அறிய முடிந்தது.

‘The grammar of matter’ என்னும் தளத்தில் ‘Mother Goose in Dorset’ என்ற தலைப்பில் 2014, ஜூலை 24ம் தேதி கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சரஸ்வதி எனப் பரவக் கூடிய சிலையின் படமும் உள்ளது. அப்படத்திற்குக் கீழே ‘வாத்து மீது சவாரி செய்யும் அப்ரோடைட்’ (Aphrodite riding a goose) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ‘British Museum’ தளத்திலும் அதே படம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அப்ரோடைட்டின் சுடுமண் சிலை என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த சிலை கி.மு.3 - கி.மு.2 காலக்கட்டத்தைச் சேர்ந்தது என்றும், இது சைப்பிரசு (Cyprus) என்னும் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது என்றும் உள்ளது. இதே தகவல் வேறு சில தளங்களிலும் காண முடிகிறது.
அப்ரோடைட் ஒரு கிரேக்கப் பெண் கடவுளாகக் கருதப்படுகிறார். அது குறித்த கட்டுரைகளும் ஊடகங்களில் வந்துள்ளன. இதற்கு முன்னர் கடவுள் சிலைகள் குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : 28,450 ஆண்டுகள் பழமையான சிவனின் கல்ப விக்ரஹா சிலை கிடைத்ததாக அர்ஜுன் சம்பத் பரப்பும் வதந்தி !
மேலும் படிக்க : சென்னை அருகே அகழாய்வில் 12,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை கிடைத்ததாகப் பரப்பப்படும் வதந்தி
முடிவு :
நம் தேடலில், சவூதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட சரஸ்வதி சிலை எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. இது சைப்பிரசு என்னும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ‘அப்ரோடைட்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் சிலை என்பதை அறிய முடிகிறது.