
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link | Archive link
விரிவான விளக்கம்

Twitter link
இந்நிலையில், சாட்டை துரைமுருகனை பிணையில் எடுக்க டெல்லியில் இருந்து வழக்கறிஞர்களை அழைத்து வர மக்களிடமும், கட்சியினரிடமும் நீதி கேட்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளரும், பேசு தமிழா பேசு யூடியூப் சேனலை நடத்தி வரும் ராஜவேல் நாகராஜன் ட்விட்டரில் பதிவிட்டதாக ஓர் ட்வீட் வைரலாகி வருகிறது.


உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் ஸ்க்ரீன்சார்ட் அனைத்திலும் நேரம், லைக், கமெண்ட் ஆகியவை ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. மேலும், ராஜவேல் நாகராஜன் ட்விட்டர் பக்கத்தில், துரைமுருகனை பிணையில் எடுக்க நிதி கேட்கும் ட்வீட் ஏதும் இடம்பெறவில்லை. மாறாக, தன்னுடைய பெயரில் போலியான ட்வீட் பரவி வருவதாக பதிவிட்டு இருக்கிறார்.
இப்படி நான் போடாத ஒரு ட்வீட்டை போட்டோஷாப் செய்து பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதை திட்டமிட்டு பகிர்ந்திருக்கும் ஐடிக்களை பார்ரத்தாலே தெரியும் அவர்களின் வன்மம் ஏன் என! உள்நோக்கத்தோடு இதை பரப்பிய நபர்கள் மேல் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும். pic.twitter.com/h2UsRerUq6
— Rajavel Nagarajan (@iamradioguru) December 20, 2021
Twitter link | Archive link
" இப்படி நான் போடாத ஒரு ட்வீட்டை போட்டோஷாப் செய்து பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதை திட்டமிட்டு பகிர்ந்திருக்கும் ஐடிக்களை பார்ரத்தாலே தெரியும் அவர்களின் வன்மம் ஏன் என! உள்நோக்கத்தோடு இதை பரப்பிய நபர்கள் மேல் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும் " என ராஜவேல் நாகராஜன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.