YouTurn

சாத்தான்குளம் சம்பவத்திற்கு சவூதி இளவரசர் ட்வீட் என நையாண்டிப் பதிவு !

சாத்தான்குளம் சம்பவத்திற்கு சவூதி இளவரசர் ட்வீட் என நையாண்டிப் பதிவு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

நையாண்டி

சரிபார்க்கப்பட்ட கூற்று

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையில் இருந்த தந்தை மற்றும் மகன் இறப்பிற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்தும், நீதி கேட்டும் கருத்துக்களை பதிவிட்டு வருவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அவர்களின் இறப்பை வைத்து அரசியல் சார்ந்த வதந்திகளும், மதம் சார்ந்த பாகுபாடுகள் மற்றும் நையாண்டிப் பதிவுகள் பரவி...

பரவிய செய்தி

சாத்தான்குளம் சம்பவம் இளவரசர் முகமதுபின் சல்மான் நாடார் டுவிட்.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையில் இருந்த தந்தை மற்றும் மகன் இறப்பிற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்தும், நீதி கேட்டும் கருத்துக்களை பதிவிட்டு வருவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அவர்களின் இறப்பை வைத்து அரசியல் சார்ந்த வதந்திகளும், மதம் சார்ந்த பாகுபாடுகள் மற்றும் நையாண்டிப் பதிவுகள் பரவி வருகின்றன.



மானமுள்ள முஸ்லீம் நாடார்கள் எனும் பக்கத்தில், " சாத்தான்குளம் சம்பவத்திற்கு இளவரசர் முகமதுபின் சல்மான் நாடார் டுவிட் " என நியூஸ் 18 தமிழ் உடைய செய்தியின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். இதை சாதாரணப் பதிவாக கடந்து செல்ல முடியவில்லை. இதை சில முகநூல் குழுக்களில் பகிர்ந்து வருவதையும் பார்க்க முடிந்தது.



இது நையாண்டிக்காக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட பதிவு. உண்மையில், " அந்த குடும்பத்தின் வலியை கற்பனைக்கூட செய்ய முடியவில்லை. குற்றவாளி தப்பித்துவிடக்கூடாது " எனக் கூறியது நடிகை பிரியங்கா சோப்ரா. ஜூன் 27-ம் தேதி பிரியங்கா சோப்ராவின் கருத்து நியூஸ்18 தமிழில் செய்தியாக வந்துள்ளது. அதில் சவூதி இளவரசரின் புகைப்படத்தை வைத்து மாற்றியுள்ளனர்.



ஜூன் 26-ம் தேதி பிரியங்கா சோப்ரா ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இறப்பிற்கு நீதிக்கேட்டு தன் ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.



Twitter link | archive link

அந்த முகநூல் பக்கத்தில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பல நையாண்டிப்பதிவுகள் பதிவாகி இருக்கின்றன. இது முற்றிலும் தவறான செயல்.



Facebook post archive link 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க