YouTurn

சசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு !

சசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திமுகவை வீழ்த்த சசிகலா காலில் விழத் தயார் - குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர்



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

துக்ளக் வார இதழின் 51வது ஆண்டு விழா நிகழ்வின் போது ஆடிட்டர் குருமூர்த்தி, வீடு பற்றி எரியும் போது கங்கை ஜலத்திற்காக காத்திருக்க முடியாது, சாக்கடை ஜலத்தையும் வாரி வீசலாம் எனும் உதாரணத்தை சசிகலாவைக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திமுகவை வீழ்த்த சசிகலா காலில் விழத் தயார் என குருமூர்த்தி கூறியதாக புதிய தலைமுறை செய்தியின் எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.



Facebook link | Archive link



"பாஜக-அதிமுக கூட்டணியில் சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைந்தால் திமுகவைப் போல் அதிமுகவும் குடும்ப கட்சி ஆகிவிடும்" குருமூர்த்தி கூறியதாக வெளியான நியூஸ் கார்டில் எடிட் செய்து பரப்பி வருகிறார்கள்.



பாஜக-அதிமுக கூட்டணியில் சசிகலா இணைப்பை ஆதரிப்பதாக வெளியான தகவல் குறித்து குருமூர்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார். " அமமுகவை நான் இன்னும் மன்னார்குடி மாஃபியா என்றே கருதுகிறேன். அவர்கள் பாஜக-அதிமுக கூட்டணியின் அங்கமானால்கூட, சந்திரசாமியை சாக்கடை என்று கருதியதைப் போல, இவர்களை மாஃபியா என்றே கருதுகிறேன் " என குருமூர்த்தி கூறி இருக்கிறார்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க