YouTurn

பாஜகவில் இணைந்த சரவணகுமார் ஐஆர்எஸ் என தவறாக பரவும் பூ.கொ.சரவணன் புகைப்படம் !

பாஜகவில் இணைந்த சரவணகுமார் ஐஆர்எஸ் என தவறாக பரவும் பூ.கொ.சரவணன் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


நேற்று தமிழகத்தில் இருந்து டெல்லி சென்று பாஜகவில் இணைந்த மூன்று முக்கியனவர்களில் அதிகம் அறியப்படாதா நபர் சரவணகுமார் IRS. IRS என்கிற அரசு உயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்திருக்கும் இந்த இளைஞரை பற்றி அவ்வளவாக மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.


இவர் தந்தை கேஸ் அடுப்பு ரிப்பேர் செய்யும் ஒரு எளிய பணியாளர். பஸ் வசதி கூட இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்து, படிக்கும் காலத்திலேயே, படிப்பதில் இருந்த மிகுதியான ஆர்வத்தினால் ஆனந்த விகடன் மாணவ பிரிவு பத்திரிக்கையில் பணிபுரிந்து, முதல் மாத சம்பளத்தில் 1000 ரூபா க்கு 1030 ரூபா க்கு புத்தகம் வாங்கி அதற்கு மேலான தொகைக்கு புத்தகம் எழுதி கொடுத்து. படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி IRS என்ற தகுதி அடிப்படையிலான உயர்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


பொருளாதார ரீதியாக மிகத் தாழ்ந்த குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் என்று தானும் உயர்ந்து தன் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்து என்று நாட்டிற்கும் பெருமை சேர்க்க ஒரு முன்னுதாரண இளைஞராக திரு சரவணகுமார் IRS விளங்குகிறார். இப்படி இன்று நாடு முழுவதும் படித்த பல இளைஞர்கள் பாஜகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள்! இனி தமிழ்நாடுக்கு நல்ல காலமே!







Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த மூன்று முக்கிய நபர்களில் மிக அறியப்படாத சரவணகுமார் ஐஆர்எஸ் என்பவர் குறித்து பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் மீம்கள், அவரின் வாழ்க்கை குறித்த ரைட்-அப்கள் என எழுதி வருவதை பார்க்க முடிந்தது.



Facebook link | Archive link

இப்படி பாஜகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார் குறித்து வைரல் செய்யப்படும் பதிவுகளில் சரவணகுமார் புகைப்படத்திற்கு பதிலாக பூ.கொ.சரவணன் எனும் மற்றொரு ஐஆர்எஸ் அதிகாரியின் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கேஸ் அடுப்பு ரிப்பேர் செய்யும் ஒரு எளிய பணியாளர் மகன் என பூ.கொ.சரவணன் குறித்த தகவல்களையும் இணைத்து இருக்கிறார்கள்.



Twitter link | Archive link 

" அன்பார்ந்த பாஜக தொண்டர்களே. என் பெயர் பூ.கொ.சரவணன். சரவணகுமார் அல்ல. நான் இன்னமும் அரசுப் பணியில் இருக்கிறேன். அரசியலில் களம்கண்டிருக்கும் மேனாள் IRS அதிகாரி சரவணகுமரன் அமமுக-ல் இருந்தவர். அவர் பெயர்,என் புகைப்படம், வாசிப்புப் பயணத்தை கலந்து செய்த கற்பனைக்கிச்சடி உண்மையில்லை. நன்றி " என தன்னைப் பற்றி பரவும் புரளிகளுக்கு பூ.கொ.சரவணன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார்.



தமிழக பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார் பாஜகவில் இணைந்ததாக புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link | Archive link 



பாஜகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களின் மருமகன் ஆவார். 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய வருவாய் பணி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கடந்த 2017-ல் விருப்ப ஓய்வு பெற்று மத்திய அரசு பணியில் இருந்து விலகினார். அரசு பணியில் இருந்து விலகிய பிறகு டி.டி.வி தினகரன் கட்சியில் செய்தித்தொடர்பாளராக ஓராண்டு இருந்தார். பின்னர் கட்சியில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

சரவணகுமார் குறித்து எழுதுவதற்கு பதிலாக பணியில் இருக்கும் பூ.கொ.சரவணன் அவர்களின் புகைப்படத்தையும், அவர் வாழ்க்கை குறித்த தகவல்களையும் இணைத்து பரப்பி வருகிறார்கள் என அறிந்து கொள்ள முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க