YouTurn

சேலத்தில் குழந்தைகளை கடத்த வந்த நபர் சிக்கியதாக பரவும் பழைய தவறான வீடியோ !

சேலத்தில் குழந்தைகளை கடத்த வந்த நபர் சிக்கியதாக பரவும் பழைய தவறான வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சேலத்தில் திடீரென நேற்று பகலில் 400 பேர் வெளிநாட்டில் இருந்து இறங்கி இருக்கிறார்கள். அதுவும் மெய்னா 7 வயசு, 8 வயசு பொண்ணுகளை தான் அதிகமாக கடத்துறாங்க. சின்ன சின்ன பசங்களையும் கடத்துறாங்க. குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கோங்க. அதில் ஒருத்தன் பெண் வேஷத்தில் குழந்தையை தூக்கிட்டு போகும் போது ஊர்க்காரங்க பிடிச்சுட்டாங்க. சேலத்தில் நேற்று நடந்தது. அவனை பிடிச்சு அடிச்சப்போ நாங்க 400 பேர் இறங்கியிருக்கோம்னு தைரியமான பத்திரிகைகாரங்ககிட்ட சொல்றான்.

[video width="264" height="480" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2021/04/WhatsApp-Video-2021-04-11-at-4.18.14-AM.mp4"][/video]

 

விரிவான விளக்கம்

சேலத்தில் குழந்தைகளை கடத்த வெளிநாட்டில் இருந்து 400 பேர் வந்துள்ளதாகவும், குழந்தையை கடத்த முயன்ற போது ஒருவனை பிடித்து உள்ளதாகவும் எச்சரிக்கை செய்யும் ஆடியோ உடன் கூடிய 1.15 நிமிட வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

சேலத்தில் பேருந்து நிலையத்தில் வைத்து சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் குறித்து தேடிப் பார்க்கையில், வைரலாகும் வீடியோ உடன் தொடர்புடைய செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.



ஆகையால், பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் தர்மஅடி என சில கீ வார்த்தைகளைக் கொண்டு தேடிப் பார்த்தபோது, 2019 பிப்ரவரி 21-ம் தேதி ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் " தஞ்சாவூரில் சிறுமியை கடத்த முயன்ற ஒருவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம்-வீடியோ " என வைரல் செய்யப்படும் வீடியோ வெளியாகி இருக்கிறது.


" தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல காத்திருந்த போது 7ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் போதையில் ஒருவர் என் கூட வா, வீட்டுக்குப் போகலாம் என அழைத்து பாலியல் சீண்டல் செய்துள்ளான். அப்போது மாணவி காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டார். பெண்கள் உள்பட பொதுமக்கள் பலரும் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ஒரத்தநாடு அருகே உள்ள நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரிய வந்தது. ஆனால், அந்த வாலிபரை காவல்துறை கைது செய்யவில்லை " என 2019 பிப்ரவரி 20-ம் தேதி விகடனில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : சேலத்தில் குழந்தைகளை கடத்த 400 பேர் வந்துள்ளதாக வாட்ஸ் அப் வதந்தி !

இதேபோல், 2019ல் சேலத்தில் குழந்தைகளை கடத்த 400 பேர் வந்துள்ளதாக பிற மாநில புகைப்படங்களை இணைத்து வதந்தி பரப்பியது குறித்தும் நாம் பதிவிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், சேலத்தில் குழந்தைகளை கடத்த 400 பேர் வந்துள்ளதாகவும், பேருந்து நிலையத்தில் சிறுமியை கடத்தும் போது ஒருவர் சிக்கியதாக பரவும் வாட்ஸ் அப் வீடியோ வதந்தியே. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து வதந்தி பரப்புகிறார்கள் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க