YouTurn

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என சச்சின் கூறியதாகப் பரவும் மோசடி!

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என சச்சின் கூறியதாகப் பரவும் மோசடி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பிரபலங்களின் பெயரில் முன்னணி ஊடகங்களில் செய்தி வெளியானதுபோல் போலியான தளங்களின் மூலம் ஆன்லைன் மோசடி செய்யப்படுகிறது.

பரவிய செய்தி

ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வழியை சொன்ன சச்சின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


image.png

Claim link

விரிவான விளக்கம்

கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் நேர்காணல் ஒன்றில் ஆன்லைனில் தான் பணம் சம்பாதிக்கும் வழிமுறையை நெறியாளருக்குத் தெரிவித்ததாகவும் அதனை அவர் செய்து பார்த்து பணம் சம்பாதித்ததாகவும் பிபிசியில் கட்டுரை வெளியாகி இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக நேஷனல் வங்கி சச்சினுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் பரவக்கூடிய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

image.png


உண்மை என்ன?


பிபிசி தளத்தில் செய்தி வெளியாகி இருப்பதாகப் பரவும் செய்தியின் URL லிங்க் ‘caqo.bartunyam.com’ என்றுள்ளது. இது உண்மையான பிபிசி தளம் கிடையாது என்பதை இதனைக் கொண்டே அறியமுடிகிறது. மேலும் பிபிசி இப்படி எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்பதையும் அறியமுடிந்தது.

பரவக்கூடிய கட்டுரையில் உள்ள படத்தில் ’In Depth Graham Bensingerஎன்கிற பெயர் இருப்பதைக் காணலாம். அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் கிரஹாம் பென்சிங்கருக்கு சச்சின் அளித்த நேர்காணல் கடந்த ஜனவரி 25ஆம் தேதி யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த நேர்காணல் ஸ்கிரீன்ஷாட்தான் பரவக்கூடிய செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றி சச்சின் எந்த தகவலையும் சொல்லவில்லை. சச்சின் மற்றும் பிபிசி பெயரைப் பயன்படுத்திப் பொய் செய்தி பரப்பப்படுகிறது என்பது இதன்மூலம் அறியமுடிகிறது.



மேற்கொண்டு இதுதொடர்பாகத் தேடியதில், இதே போன்று அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் பெயர்களிலும் இதே மாதிரியான பொய் செய்திகள் பரவி இருப்பதைக் காணமுடிந்தது. 

இதற்கு முன்னர் சாய் பல்லவி, ஆல்யா மானசா நேர்காணலில் இதே போன்று ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றித் தெரிவித்ததாகவும் பொய் செய்திகள் பரப்பப்பட்டது. அதனை நமது யூடர்ன் தளத்தில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம். 

மேலும் படிக்க: சாய் பல்லவி, ஆல்யா மானசா மீது ரிசர்வ் வங்கி வழக்குத் தொடுத்ததாகப் பொய் பரப்பும் பண மோசடி கும்பல்!


பிரபலங்கள் மற்றும் முக்கிய ஊடகங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மக்களிடையே நம்பிக்கையை விதைத்து, அவர்களிடம் பணம் பறிப்பதற்காக மோசடி கும்பல் உருவாக்கிய போலி செய்திதான் இது. யாரும் இத்தகைய செய்திகளை நம்பவோ முதலீடு செய்யவோ வேண்டாம். 


முடிவு: 


சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிமுறையை நேர்காணல் ஒன்றில் கூறியதாக பிபிசி பெயரில் பரவும் செய்தி உண்மையல்ல. சச்சினும் அப்படி எந்த தகவலையும் சொல்லவில்லை. 'பிபிசி'யும் அப்படி எந்த செய்தியையும் வெளியிடவில்லை. இது பண மோசடி கும்பல் பரப்பும் பொய் செய்தி.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.