YouTurn

சச்சின் பெயரில் உலாவும் நையாண்டி ட்விட்டர் கணக்கின் கிண்டல் பதிவு !

சச்சின் பெயரில் உலாவும் நையாண்டி ட்விட்டர் கணக்கின் கிண்டல் பதிவு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

நையாண்டி

சரிபார்க்கப்பட்ட கூற்று

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில், " உத்தரப் பிரதேசத்தில் 3000 டன் தங்கம் கண்டுபிடித்தது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இப்பொழுதும் எனக்கு பிடித்தது 2000 ரூபாய் நோட்டில் நனோ-ஜிபிஎஸ் சிப் கண்டுபிடித்தது " என சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில்...

பரவிய செய்தி

பாஜக தொண்டர்களை கலாய்த்த டெண்டுல்கர் ! உபியில் 3000 டன் தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாஜக , ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தெரிவித்தனர். இதனை புவியியல் துறை மறுத்தது. இது குறித்து சச்சின் டெண்டுல்கர் " இந்த 3000 டன் தங்க சுரங்கத்தை என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு பிடித்தது ரூ 2000 நோட்டில் சிப் இருந்தது தான் " என்று கலைத்துள்ளார்.



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில், " உத்தரப் பிரதேசத்தில் 3000 டன் தங்கம் கண்டுபிடித்தது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இப்பொழுதும் எனக்கு பிடித்தது 2000 ரூபாய் நோட்டில் நனோ-ஜிபிஎஸ் சிப் கண்டுபிடித்தது " என சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் 3000 டன் தங்கம் கிடைத்ததாக வைரலான வதந்தி உடன் 2000 ரூபாய் நோட்டில் நனோ ஜிபிஎஸ் சிப் இருப்பதாக கூறப்பட்ட வதந்தியை இணைத்து வெளியான ட்வீட் உடைய ஸ்க்ரீன்ஷார்ட் பரவி வருகிறது.

அந்த ட்விட்டர் பக்கம் சச்சின் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமே இல்லை, நையாண்டி ட்விட்டர் பக்கம் என அதன் பெயரையும்(Trendulkar), புகைப்படத்தையும் பார்த்தாலே தெளிவாய் தெரிகிறது. ஆனால், அதை பார்ப்பவர்களும், பகிர்பவர்களுக்கு உண்மையான பக்கம் என்றே நினைத்து வருகிறார்கள்.



மேலும், Javith news pallapatti & delhi செய்திகள் என்ற பெயரில் சச்சின் உடைய ட்வீட் என அந்த ஸ்க்ரீன்ஷார்டை தமிழில் வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பி வருகிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது. சச்சின் பெயரில் பரவி வரும் தவறான வாட்ஸ் அப் ஃபார்வர்டு தகவலை கண்டால் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.



மேற்காணும் புகைப்படத்தில் இருக்கும் ட்விட்டர் பக்கமே முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம். சச்சின் பெயரில் மட்டுமில்லை, 2019 நவம்பரில் அவரின் மகன் மற்றும் மகளின் பெயர்களிலும் போலியான ட்விட்டர் கணக்குகள் இருப்பதாக சச்சின் வெளியிட்ட ட்வீட் செய்தியாய் வெளியாகி இருக்கின்றன.



Twitter link | archived link  
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…