YouTurn

சபரிமலை அரவணப் பிரசாதம் தயாரிப்பை இஸ்லாமிய நிறுவனத்திற்கு அளித்ததாக வதந்தி !

சபரிமலை அரவணப் பிரசாதம் தயாரிப்பை இஸ்லாமிய நிறுவனத்திற்கு அளித்ததாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அரேபியர் தயாரிப்பில் அரவண பிரசாதம் ? அரவானைப் பாயசத்தை தயாரித்து அளிக்கும் உரிமையை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அஜ்மான் & கோ நிறுவனத்தின் துணை நிறுவனமான அல் ஜஹாவுக்கு அளித்துள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு.

விரிவான விளக்கம்

கேரளா சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் அரவணப் பிரசாதத்தை தயாரித்து அளிக்கும் பணியை அரபு அமீரகத்தைச் சேர்ந்த அஜ்மான் & கோ நிறுவனத்தின் துணை நிறுவனமான அல் ஜஹாவுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்துள்ளதாக அரபிக் மொழியில் விற்பனை செய்யப்படும் " அரவணப் பாயசம் " எனும் தயாரிப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் கண்டனத்துடன் வைரலாகி வருகிறது.

 



Archive link 



உண்மை என்ன ? 

சபரிமலை கோவிலில் அளிக்கப்படும் பாரம்பரிய பிரசாதங்களின் பட்டியல் கேரள அரசின் இணையதளத்தில் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில், அரவணப் பிரசாதம் விலை ரூ. 80 எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியா போஸ்ட் உடைய இணையதளத்தில், " சபரிமலை கோவிலின் பிரசாதங்கள் " போஸ்ட் மூலம் அனுப்பப்படுவதாக புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளது.



இந்தியா போஸ்ட் மூலம் அனுப்பப்படும் சபரிமலை பிரசாதத்தில், " அரவணப் பிரசாதம் " என ஐயப்பன் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், வைரல் செய்யப்படும் புகைப்படத்தில், " அரவணப் பாயசம் " என்று இருக்கிறது, ஐயப்பன் புகைப்படமும் இல்லை.



வைரல் செய்யப்படும் அல் ஜஹா நிறுவனம் ஆனது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அஜ்மானை அடிப்படையாகக் கொண்டு 2020-ல் நிறுவப்பட்டது. 2021 அக்டோபரில் துபாயில் அல் ஜஹா தயாரிப்பான அரவணப் பாயசத்தை சாப்பிடுவதாக கேரளாவைச் சேர்ந்த பெண் யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.



சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையர் பி.எஸ்.பிரகாஷ், " இது தவறான தகவல். பிரசாதம் கோவில் தரப்பில் தயாரிக்கப்படுகிறது. எந்தவொரு நிறுவனமோ அல்லது அமைப்போ தயாரிப்பதில்லை " என தி குயின்ட் இணையதளத்திற்கு தெரிவித்து இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், சபரிமலை கோவிலில் அளிக்கப்படும் அரவணப் பிரசாதத்தை தயாரித்து வழங்கும் பணியை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அல் ஜஹாவுக்கு என்ற இஸ்லாமிய நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. இதை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மறுத்து உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் ஜஹா என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் அரவணப் பாயசம் உடைய புகைப்படம் இங்கு தவறாக பரப்பப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க